பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49 காசுக்கும் விற்பனையாகிறது.
மழை நிலவரம்: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் 23,24 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 19, 2024 22:44 IST
பொங்கல் பண்டிகை தினத்தில் நெட் தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியீடு
கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு என்னும், யுஜிசி நெட் தேர்வுகளை பொங்கல் பண்டிகையின் போது நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 15 மற்றும் 16-ந் தேதிகளில், 2 ஷிப்ட்களாக பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடக்கும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Dec 19, 2024 22:41 IST
மருத்துவமனையில் பா.ஜ.க எம்.பி: ராகுல்காந்தி தள்ளிவிட்டதாக தகவல்!
நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடந்த தள்ளு முள்ளு பிரச்னையில், ராகுல்காந்தி தன்னை தள்ளிவிட்டதாக கூறி பா.ஜ.க எம்.பி ப்ரதாப் சாரங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Dec 19, 2024 21:01 IST
டிசம்பர் 22-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் டிசம்பர் 22-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
-
Dec 19, 2024 20:59 IST
லப்பர் பந்து படத்திற்காக விருது பெற்ற நடிகர் தினேஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், லப்பர் பந்து படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் தினேஷ்க்கு வழங்கப்பட்டது.
-
Dec 19, 2024 20:38 IST
மருத்துவக் கழிவுகள் விவகாரம்: கேரளா அரசுக்கு எதிராக தமிழக அரசு கடிதம்!
நெல்லையில் உள்ள 4 கிராமங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
-
Dec 19, 2024 19:57 IST
பெண் அமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு: பா.ஜ.க சி.டி.ரவி கைது
கர்நாடக மாநில் மகளிர் நலத்துறை அமைச்சரை, இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் பேச்சை கண்டிக்கும் வகையில் நடத்தப்பட்ட போராட்த்தின்போது, சட்டப்பேரவையில் வைத்து தன்னை இழிவுபடுத்தும், மோசமான வார்த்தைகளை பேசியதாக, ரவி மீது அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
-
Dec 19, 2024 19:14 IST
'சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள், மாரடைப்பால் உயிரிழப்பு
கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தை இயக்கிய இயக்குனர் சங்கர் தயாள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என புதிய படத்தை இயக்கியுள்ள அவர், அப்படத்தின் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
-
Dec 19, 2024 17:37 IST
அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: “அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார்; உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Dec 19, 2024 16:54 IST
ராகுல் காந்தி மீது 3 பா.ஜ.க எம்.பி.க்கள் தாக்குதல் - காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி மீது 3 பா.ஜ.க எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் காந்தி மீதான அப்பட்டமான தாக்குதல் அவரது கண்ணியத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வின் மீதான தாக்குதல். எங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Dec 19, 2024 16:50 IST
அமித்ஷா பேசியதை திரிக்கவில்லை; பா.ஜ.க குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் - கார்கே
காங்கிரஸ் தலைவர் கார்கே செய்தியாளர்கள் சந்திப்பு: “அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் துளியும் உண்மையில்லை. பா.ஜ.க கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரம் வழங்க வேண்டும்” என்று கூறினார்.
-
Dec 19, 2024 16:18 IST
`விடுதலை-2' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
`விடுதலை-2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளை நாளை (டிசம்பர் 20) திரையரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
Dec 19, 2024 16:14 IST
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை நீக்கக் கோரிக்கை; லோக் சபா சபாநாயகருக்கு மதுரை வழக்கறிஞர் கடிதம்
அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.ராம சுப்ரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அவையின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க நேரிடும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 19, 2024 16:09 IST
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைத் தலைவர் நிராகரித்தார். ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.
-
Dec 19, 2024 15:35 IST
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
அமைச்சர் ரகுபதி: “அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. அமித்ஷாவை 'வலிக்காமல் வலியுறுத்த' கூட மனமில்லாமல் அமைதி என எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்; ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் இ.பி.எஸ் அமைதி” என்று கூறியுள்ளார்.
-
Dec 19, 2024 14:50 IST
ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது, ராகுல் காந்தி என் அருகே வந்து நின்று என்னை பார்த்து கத்தினார். அவரின் செயலால் எனக்கு அசௌகர்யமாக இருந்தது. தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களவை தலைவரிடம் நாகாலாந்து மாநில பாஜக பெண் எம்.பி. பங்னோங் கொன் யாக் புகார் அளித்துள்ளார்.
-
Dec 19, 2024 14:44 IST
மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
அமித்ஷா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Dec 19, 2024 14:20 IST
பெண் எம்பியை ராகுல் காந்தி தாக்கியதாக பாஜக குற்றச்சாட்டு
பெண் எம்பியை ராகுல் காந்தி தாக்கியதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி, பாஜக அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல் காந்தி பாஜக பெண் எம்.பி.யை தாக்கியதாக ராஜ்யசபாவின் அவைத்தலைவர் ஜே.பி.நட்டா, குற்றம் சாட்டினார்.
-
Dec 19, 2024 13:57 IST
பா.ஜ.க, காங்கிரஸ் மோதல்
வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியே பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, பாஜகவைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Dec 19, 2024 13:40 IST
தனியார் வங்கிக்குள் புகுந்து, வங்கி ஊழியரை வெட்டிய நபர்
சென்னை தி.நகரில் தனியார் வங்கிக்குள் புகுந்து, வங்கி ஊழியரை வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியரின் காது வெட்டப்பட்ட நிலையில், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி, வாடிக்கையாளர் போல நுழைந்து வங்கி ஊழியரின் காதை வெட்டிய நபர். வங்கி ஊழியரை வெட்டிவிட்டு தப்ப முயன்றவரை சக ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 19, 2024 13:13 IST
பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதில் முழங்காலில் காயம்- கார்கே
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதலில் தன்னை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டு உள்ளார்.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
நாடாளுமன்ற நுழைவு வாயிலை தான் அடைந்தபோது பாஜக எம்.பி.க்கள் தன்னை பிடித்து தள்ளினர். இதனால் நான் அவைக்கு நொண்டி நொண்டி சென்றேன். பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதில் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
-
Dec 19, 2024 13:07 IST
அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மாநிலங்களவை விதி 188ன் கீழ் அமித்ஷா மீது ஏன் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வரக்கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய தொனி நையாண்டித்தனமாக, மிக மோசமாக இருந்தது என கார்கே கூறியுள்ளார்.
-
Dec 19, 2024 13:03 IST
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.,க்கள் தன்னை தள்ளிவிட முயன்றதாக காங். எம்.பி., ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
-
Dec 19, 2024 12:17 IST
ரூ.177.85 கோடி மதிப்பில் 34 உயர்மட்டப் பாலங்கள்
ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசாணை வெளியிடப்பட்டு, கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படுகிறது.
-
Dec 19, 2024 11:48 IST
அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
சென்னை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 19, 2024 10:58 IST
ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் மரணம்
கடந்த 25 ஆண்டுகளாக டமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
-
Dec 19, 2024 10:36 IST
தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி - அண்ணாமலை
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
-
Dec 19, 2024 10:33 IST
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
-
Dec 19, 2024 10:31 IST
கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி
”இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும்; இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் சும்மா இருப்பது கடினம் தான் கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும்” என கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேட்டி அளித்துள்ளார்.
-
Dec 19, 2024 10:29 IST
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு கிராம் ரூ.7,070க்கும், ஒரு சவரன் ரூ.56,560க்கும் விற்பனையாகிறது.
-
Dec 19, 2024 10:26 IST
போதைப்பொருள் - கடும் நடவடிக்கைக்கு உத்தரவு
போதைப் பொருள் விவகாரத்தில் காவலர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது எதிரொலி யாராக இருந்தாலும் போதைப்பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் விவகாரத்தில் காவலர்கள் தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவு. மெத் மற்றும் போதை மாத்திரைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ஐந்து காவல் துறையினர் போதைப்பொருள் விற்பனை தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Dec 19, 2024 10:24 IST
ஆம்பூரில் ரயில் மறியல் - விசிகவினர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டுளனர். அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக கூறி பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய லால்பாக் விரைவு ரயிலை மறித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 19, 2024 09:54 IST
அன்பழகன் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.
-
Dec 19, 2024 09:27 IST
அமித்ஷா பேச்சு - திமுக இன்று ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
-
Dec 19, 2024 09:11 IST
விஜய் தனிப்பட்ட புகைப்படம் - அண்ணாமலை கேள்வி
தவெக தலைவர் விஜய் கோவாவிற்கு சென்றபொது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தது? இதுதான் திமுக காட்டக்கூடிய அரசியல் நாகரீகம்; யார் அந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டார்களோ அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
-
Dec 19, 2024 08:42 IST
மழை அப்டேட் - பிரதீப் ஜான்
கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பெய்யும் கடைசி மழை இதுதான். மேகங்கள் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியுள்ளன. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
Dec 19, 2024 08:34 IST
பிரதமர் மோடி டிச.21ல் குவைத் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குவைத் நாட்டிற்கு டிசம்பர் 21 ஆம் தேதி செல்கிறார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
-
Dec 19, 2024 08:32 IST
2 கோடியாவது பயனாளியை சந்திக்கிறார் முதலமைச்சர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியை இன்று (டிச. 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ஈரோடு மாவட்டத்திற்கு கள ஆய்விற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்குகிறார்.
-
Dec 19, 2024 08:24 IST
நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. மக்களவையில் இருந்து 21 எம்.பி.க்கள் இடம்பெறுகின்றனர்.
-
Dec 19, 2024 08:22 IST
அமித்ஷா விளக்கம்
அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதை AI மூலம் திரித்து வெளியிட்டதாக, காங்கிரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமது முழு உரையையும் கேட்டால் உண்மை புரியும் என விளக்கம் அளித்துள்ளார்.
-
Dec 19, 2024 07:41 IST
சுனிதா பூமிக்கு திரும்புவதில் தாமதம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ்ிரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாதம் தாமதமாகிறது.
-
Dec 19, 2024 07:39 IST
“உதயநிதிக்கு என்ன புரிந்தது?”
இந்தி தெரியாது போடா என கூறிய உதயநிதிக்கு, அமித்ஷா இந்தியில் பேசியதில் என்ன புரிந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஒருபோதும் அம்பேத்கருக்கு எதிராக செயல்பட்டதில்லை என உறுதி அளித்தார்.
-
Dec 19, 2024 07:37 IST
சட்டவிரோத குடியேற்றம்-போலீசார் ஆய்வு
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உரிய ஆவணங்கள் இன்றி தங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தவர்கள், ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனரா என போலீசார் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
-
Dec 19, 2024 07:35 IST
சிறுத்தை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே அஞ்சலி என்ற 22 வயது இளம்பெண் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆறுதல் கூறினார்.
-
Dec 19, 2024 07:32 IST
புற்றுநோய்க்கு தடுப்பூசி - நல்ல செய்தி சொன்ன ரஷ்யா
mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா, அடுத்த ஆண்டு முதல் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக கூறியுள்ளது. பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
-
Dec 19, 2024 07:29 IST
இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவிலும் இந்திய பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்படும். அமெரிக்காவின் சில பொருட்களுக்கு இந் தியாவில் 100% வரை இறக்குமதி வரி வசூலிக்கப்படுகிறதி. அமெரிக்க பொருட்களுக்கூ 100% வரி விதிக்கும்போது, நாம் மட்டும் ஒன்றும் வசூலிக்காமல் இருக்க முடியுமா? என்று டொனால்டு ட்ரம்ப் பேட்டி அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.