பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
குரூப் 1 தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 90 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 10, 2024 21:35 ISTதனிநபர் ஜி.டி.பி-யில் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகம் - சி.ஏ.ஜி அறிக்கை
2022 - 23 நிதியாண்டில் தேசிய தனிநபர் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி திறனை (ஜி.டி.பி) விட, தமிழ்நாட்டின் தனிநபர் ஜி.டி.பி அதிகமாக உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் உள்நாட்டு உற்பத்தி திறன் (ஜி.டி.பி) தேசிய சராசரி ரூ.1,96,983 ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தனிநபர் ஜி.டி.பி ரூ.3,08,020 ஆக உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 20:00 IST‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் கவலை அடைந்துள்ளேன்; இந்த செயலை நிறுத்துங்கள் - நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளீயில் அநாகரீகமாக் தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க... அஜித்தே’ என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கபட வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாயையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” என்று நடிகர் அஜித் குமார் ரசிகர்களூக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024 -
Dec 10, 2024 19:47 ISTமத்திய அமைச்சரை சந்தித்த திருமாவளவன்: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து திருமாவளவன் வலிவுறுத்தினார். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என கிஷன் ரெட்டி உறுதி அளித்தார் என்றும் தமிழக மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலைப்பட வேண்டாம் என்று கிஷன் ரெட்டி கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.
-
Dec 10, 2024 18:52 ISTஇ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு நோட்டீஸ்
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக இ.பி.எஸ், ஓ,பி.எஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, டிசம்பர் 19-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஆஜராக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமன உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
-
Dec 10, 2024 18:30 ISTதமிழகம் பின்னடைவு - சிஏஜி அறிக்கை
மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழகம் பின் தங்கியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி வாரியம் இருந்தும் கூட பணியாளர்களை புதிதாக சேர்ப்பதில் பின்னடைவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 18:14 ISTபோக்குவரத்து கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
தமிழக போக்குவரத்து கழகத்தின் கடன் ரூ. 21, 980 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2017-ஆம் ஆண்டில் ரூ. 6,467 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கடன் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 17:52 ISTபி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்கள் விற்பனைக்காக ஏலம்
பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்களை விற்பனைக்காக மத்திய அரசு ஏலம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4 மண்டலங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவன நிலங்கள் விற்பதற்கான ஏலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, கடலூர், புதுச்சேரி மண்டலங்களில் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 17:32 ISTபவன் கல்யாணை மிரட்டிய நபர் கைது
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணை தொடர்பு கொண்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த மல்லிகார்ஜுன ராவ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மது போதையில் அவ்வாறு பேசியதாக தெரிய வந்துள்ளது.
-
Dec 10, 2024 17:22 IST4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த நான்கு நாள்களுக்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Dec 10, 2024 16:57 ISTபாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம்: அன்னியூர் சிவா கோரிக்கை
தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்த புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழ்நாட்டில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா தனது முதல் சட்டசபை உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Dec 10, 2024 16:52 ISTகாந்தாரா 2 படம்: மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்
காந்தாரா 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் மோகன்லாலிடம பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக நடிகர் ஜெயராம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 10, 2024 16:26 ISTவலு பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என தகவல்
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ள நிலையில், இது அடுத்த 204 மணி நேரத்தில், இலங்கை தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
Dec 10, 2024 16:05 ISTதவெக மாநாட்டில் மாயமான இளைஞர்: போலீசார் தகவல்
த.வெ.க மாநாட்டுக்கு சென்று காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி மேகநாதன் என்பவரின் தந்தை புஷ்பநாதன் தொடர்ந்த வழக்கில், விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, மேகநாதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளனர்.
-
Dec 10, 2024 16:02 ISTஇளைஞர் கொலை வழக்கு: தென்காசியில் மேலும் ஒருவர் கைது
தென்காசி சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் ஏற்கெனவே, கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சூர்யா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 10, 2024 15:59 ISTசட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த ஓ.பி.எஸ்: அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை
சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அவையில் முன் வரிசையில் இருந்து பின் வரிசைக்கு மாற்றப்பட்ட ஒ.பி.எஸ் அதிருப்தியின் காரணமாக சட்டப்பேரவைக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 10, 2024 15:30 ISTகல்வி உதவித்தொகை உச்ச வரம்பை உயர்த்த கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, மாணவர்களுக்கான கல்வி உதவிக்தொகைகான வருடாந்திர உச்ச வரம்பை, 2.5 லட்சத்தில் இருந்து, 8 லட்சமாக உயர்த்த கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார்.
-
Dec 10, 2024 15:21 ISTதிமுக முன்னாள் எம்.பி. மோகன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
கோவையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த திமுக முன்னாள் எம்.பி. மோகன் உடலுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 1980ம் ஆண்டு கோவை எம்.பியாகவும், 1989ல் சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
-
Dec 10, 2024 15:14 ISTத.வெ.க மாநாட்டில் மாயமான இளைஞர் - போலீசார் தகவல்
த.வெ.க மாநாட்டுக்கு சென்று காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி மேகநாதனின் தந்தை புஷ்பநாதன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, மேகநாதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
-
Dec 10, 2024 15:00 ISTதமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
-
Dec 10, 2024 14:52 ISTமோடிக்கு ஸ்டாலின் கடிதம்
கல்வி உதவித் தொகைக்கான உச்சவரம்பை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுயுள்ளார்.
"கல்வி உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ .8 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-
Dec 10, 2024 14:50 IST5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை- தமிழ்நாடு கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கும். வலுவடைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை தமிழ்நாடு நோக்கி நகர்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
-
Dec 10, 2024 14:40 ISTசீரியல்களை தணிக்கை செய்ய மனு தாக்கல்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறான கருத்துகளும் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும் சீரியல்களில் ஒளிபரப்பப்படுகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 14:29 ISTசிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - தூத்துக்குடி எஸ்.பி. நேரில் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தினார். கோவில்பட்டியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானார். மாயமான சிறுவன் பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் நகைக்காக கடத்தி கொல்லப்பட்டானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Dec 10, 2024 14:27 ISTஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் 7-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
-
Dec 10, 2024 14:20 ISTஸ்டாலினுக்கு நன்றி சொன்ன வானதி சீனிவாசன்
"கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சட்டப்பேரவையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
Dec 10, 2024 13:39 ISTவாகை சந்திரசேகர் மறு நியமனம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக மறு நியமனம் செய்யப்பட்டுள்ள வாகை சந்திரசேகர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
Dec 10, 2024 13:31 ISTஅன்புமணி மகளுக்கு ரஜினி வாழ்த்து
அன்புமணி மகள் சங்கமித்ரா சௌமியா தயாரிப்பில் வெளியாக உள்ள `அலங்கு' திரைப்படத்தின் டிரைலர் காட்சியை நடிகர் ரஜினி பார்த்து வாழ்த்தினார்
-
Dec 10, 2024 13:31 ISTசுருளி அருவியில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு குளிக்கத் தடை
சுருளி அருவி பகுதியில் காட்டுயானைகள் முகாம் இட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுயானை இடம்பெயரும் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
-
Dec 10, 2024 13:25 ISTசிறப்பு ரயில்கள் இயக்கம்
கார்த்திகை தீபத்தையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 ரயில்களும், திருச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
-
Dec 10, 2024 13:00 ISTகேரள அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என துரைமுருகன் பதில்
முல்லை பெரியாறு அணை பராமரிப்பிற்கு பொருட்கள் கொண்டு சென்ற அதிகாரிகள் தடுக்கப்பட்டது குறித்து கேரள அதிகாரிகளிடம் பேசுவோம். நாளை (டிச.11) கேரளா செல்லும் முதல்வர் இவ்விவகாரம் குறித்து பேச வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். நானும் கேரளா செல்கிறேன். இது குறித்து கேரள அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்தார்.
-
Dec 10, 2024 12:49 ISTஆதவ் அர்ஜுனா வீடியோ வெளியீடு
எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்.
'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் விரைவில் பிரச்சாரம் நடத்தப்படும். அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்கையில் ஈடுபடும் என்ற அம்பேத்கரின் வரிகளுடன் ஆதவ் அர்ஜுனா வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
Dec 10, 2024 12:41 IST“நான் அதானியை சந்திக்கவில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாமக வலியுறுத்துமா? அதானியை நான் சந்திக்கவில்லை. அதானி முதலீடு பற்றி பொது வெளியில் வரும் தகவல் பற்றி செந்தில் பாலாஜி ஏற்கனவே பதில் அளித்துள்ளார். நானும் பதில் அளித்துள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Dec 10, 2024 12:14 ISTகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது
வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை- தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர உள்ளது.
-
Dec 10, 2024 11:27 ISTஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும்
தி.மலை தீபத்திருவிழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும். மலையேறி சென்ற தீபத்தை காண அனுமதிப்பது தொடர்பாக அறிக்கை கிடைத்த உடன் லோசனை நடத்தப்படும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீபத்திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
Dec 10, 2024 10:57 ISTமின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - செந்தில்பாலாஜி
மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துரையின் அனுமதியை கோரியுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
-
Dec 10, 2024 10:46 ISTஏரிகள் தூர்வாரப்படுமா? - துரைமுருகன் பதில்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் குடிமராத்து பணிகள் மூலம் 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டது. மீதமுள்ள 8000 ஏரிகள் தூர்வாரப்படுமா என்ற ஆர்.பி.உதயகுமாரின் கேள்விக்கு “ உறுப்பினர் குறிப்பிடுவது நல்ல திட்டம் அதை அரசு கவனிக்கும் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
-
Dec 10, 2024 10:30 ISTபிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் பிறபகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 10, 2024 10:27 ISTபிராணிகள் வதை சட்டத்தில் நாய்கள், மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை - கே.என்.நேரு
"பிராணிகள் வதை சட்டத்தில் நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மடுகளை பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர். மாடுகள், நாய்கள் தொல்லையை போக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
Dec 10, 2024 09:48 ISTகிருதுமால் நதி சீரமைப்பு பணி
மதுரை தெற்கு தொகுதி கிருதுமால் நதி, அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை தூர்வார வேண்டும் என மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கோரிக்கை விடுத்த நிலையி "கிருதுமால் நதி சீரமைப்பு பணிக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். அதேபோல மதுரை அனுப்பானடி வாய்க்கால் , பனையூர் வாய்க்கால் , சிந்தாமணி வாய்க்கால் உள்ளிட்டவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றை தூர்வார மாநகராட்சியை அணுகவும்" என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
-
Dec 10, 2024 09:19 ISTநாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலுரை
அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 2 நாட்கள் விவாதம் நடக்க உள்ளது. மக்களவையில் டிச.12, மாநிலங்களவையில் டிச.17 ஆம் தேதியும் பிரதமர் பதிலளிக்கிறார்.
-
Dec 10, 2024 09:07 ISTஇந்திய வீரர் சிராஜ்க்கு அபராதம்!
அடிலெய்ட் பிங்க் பால் டெஸ்ட்டின் போது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் உடன் ஏற்பட்ட வார்த்தை மோதலை கண்டித்து இந்திய வீரர் சிராஜ்க்கு அவரின் சம்பளத்தில் இருந்து 20% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.
-
Dec 10, 2024 09:04 ISTசதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி
கார்த்திகை மாத பிரதோஷம் பௌர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
Dec 10, 2024 08:53 ISTடங்ஸ்டன் விவகாரம்- கனிமொழி நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்றத்தி ஒத்திவைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Dec 10, 2024 08:50 ISTதிருவண்ணாமலையில் மத்திய குழுவினர் ஆய்வு!
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தில், டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 10, 2024 08:20 ISTகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதில் தாமதம்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 10, 2024 08:18 ISTதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது உறுதி!
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு மகா தீபம் ஏற்றப்படுவதில் சிரமம் இருந்த நிலையில் தீபம் ஏற்றப்படுவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 10, 2024 07:56 ISTவசூல் சாதனை படைத்த புஷ்பா 2!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா - 2 வெளியான 4 நாட்களில் ரூ.829 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
Dec 10, 2024 07:48 IST5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Dec 10, 2024 07:41 ISTமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலம்
மகராஷ்ட்ராவில் இவிஎம் இயந்திரங்களில் முறைக்கேடு செய்தே பா.ஜ.க கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டி உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இவிஎம் இயந்திர மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று பின்னர் தீயிட்டு கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
-
Dec 10, 2024 07:36 ISTகுரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 90 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.