Advertisment

Tamil News Highlights: கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க சார்பில் நிவாரணம்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bussy Anand

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. அந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

மழை எச்சரிக்கை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 11, 2024 21:15 IST

    சிலர் வேலை வெட்டி இல்லாமல் போகிறபோக்கில் கருத்து சொல்கிறார்கள் - செந்தில் பாலாஜி 

    அமைச்சர் செந்தில் பாலாஜி: “சிலர் வேலை வெட்டி இல்லாமல் போகிறபோக்கில் கருத்து சொல்லிச் செல்கின்றனர். அரசியலில் நாகரிகமாக இருக்க வேண்டும்; அரசியலில் இருப்போர் பக்குவப்பட்டு இருக்க வேண்டும். தமிழக அரசு நிர்வாகம் செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.



  • Dec 11, 2024 21:10 IST

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில்ம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Dec 11, 2024 20:58 IST

    நாகூர் சந்தனக் கூடு ஊர்வலம்: நாகை மாவட்டத்திற்கு டிச. 12-ம் தேதி  உள்ளூர் விடுமுறை

    நாகூர் சந்தனக் கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை (12.12.2024) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 11, 2024 20:19 IST

    வரதட்சனை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது - சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

    ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கவே, சட்டப்பிரிவு 498(ஏ) என்பது அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், சமீப காலங்களில் திருமண முரண்பாட்டால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழும் தனிப்பட்ட வெறுப்பைத் தீர்க்க இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. பல வழக்குகளில் தெளிவே இல்லாத பொதுப்படையான குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கின்றன. சில சமயங்களில் மனைவியின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்க வைக்க கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுகின்றன என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, கோடீஸ்வரர் சிங் அமர்வு தெரிவித்துள்ளது.



  • Dec 11, 2024 19:59 IST

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: 13ஆவது போட்டியும் டிரா

    உலக செஸ் சாம்பியன்ஷிப் : 13ஆவது போட்டியும் டிராவில் முடிந்தது. 6.5 புள்ளி பெற்று குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் இருவரும் சமநிலையில் உள்ளனர்



  • Dec 11, 2024 19:37 IST

    பக்தர்கள் மலையேற தடை ஏன்? திருவண்ணாமலை ஆட்சியர் விளக்கம்

    திருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக வல்லுநர் குழு எச்சரித்துள்ளது. எனவே எந்த வழியிலும் மலை ஏற முடியாதவாறு காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என திருவண்ணாமலை ஆட்சியர் தெரிவித்துள்ளார்



  • Dec 11, 2024 19:12 IST

    டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு

    வருகின்ற 13 ஆம் தேதி அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது



  • Dec 11, 2024 19:09 IST

    கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும் - அண்ணாமலை

    கலைஞர் கைவினை திட்டத்தை கைவிட வேண்டும், விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Dec 11, 2024 18:48 IST

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் - அண்ணாமலை

    கோயில்களை தணிக்கையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. இதற்கு எதிராக தமிழக பா.ஜ.க நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • Dec 11, 2024 18:24 IST

    தமிழக அரசு அறிக்கை; சென்னை ஐகோர்ட் அதிருப்தி

    கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக 5 லட்சம் கன மீட்டர் மண் அள்ளப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கோவையில் யானைகள் வழித்தடங்களில் அதிகளவில் மண் எடுக்க அனுமதி அளித்தது யார்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது



  • Dec 11, 2024 18:11 IST

    நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகல்

    நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்



  • Dec 11, 2024 17:45 IST

    தி.மு.க அரசு மீது ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

    தி.மு.க ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். புயலை விட அ.தி.மு.க அரசு வேகமாக செயல்பட்டதாகவும், அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 11, 2024 17:25 IST

    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏற்பாடுகள்

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Dec 11, 2024 16:50 IST

    மாநிலங்களவை தலைவர் மீது குற்றச்சாட்டு

    மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்கட்சிகளை விவாதம் நடத்த அனுமதிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



  • Dec 11, 2024 16:29 IST

    நீதிமன்றத்தில் வெடிகுண்டு? விசாரணைக்கு அறிவுறுத்தல்

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் அளித்துள்ளது. இச்சம்பவம் எவ்வாறு  நடந்தது என தனியாக விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • Dec 11, 2024 16:14 IST

    மொழி பிரிவினை குறித்து ஆர்.என். ரவி கருத்து

    மொழி ரீதியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது தான், மொழி பிரிவினைவாதத்திற்கு வழிவகுத்தது என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மெட்ராசாக இருந்த போது தாய்மொழியுடன் சேர்த்து சமஸ்கிருதமும் கற்றுத் தரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



  • Dec 11, 2024 15:28 IST

    கொடி மரம் வைக்க அனுமதி கோரிய அ.தி.மு.க: மதுரை ஐகோர்ட் கேள்வி

    அதிமுக கொடிமரம் வைக்க அனுமதி கோரிய வழக்கில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது?  என்று  டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, தாமாக முன்வந்து டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Dec 11, 2024 14:44 IST

    டெல்லி சட்டசபை தேர்தல்: தனித்து போட்டியிடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



  • Dec 11, 2024 14:42 IST

    தந்தை வைத்த தீயில் படுகாயமடைந்த மகன் மரணம்

    ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில்,  70% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.



  • Dec 11, 2024 14:17 IST

    எண்ணெய் கப்பல் மோதி கடலில் மூழ்கிய விசைப்படகு: 9 மீனவர்கள் உயர் தப்பினர்

    குளச்சலில் இருந்து 9 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில், இவர்களின் விசைப்படகு மீது எண்ணெய் கப்பல் ஒன்று, மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த மோதலில் சேதம் அடைந்த விசைப்படகு கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 9 மீனவர்களை சக மீனவர்கள் உயிருடன் மீட்டனர்.



  • Dec 11, 2024 14:04 IST

    வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மதுரையில் வி.சி.க. நிர்வாகிகள் மீது வழக்கு

    மதுரையில் வி.சி.க. கொடிக்கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை தாக்கியதாக புகார் எழுந்துள்ள நிலையில், வி.சி.க. நிர்வாகிகள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை வெளிச்சநத்தத்தில் அனுமதியின்றி வி.சி.க. கொடி கம்பம் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க சென்ற துணை வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை வி.சி.க.வினர் தாக்கியதாக வி.ஏ.ஓ. பரமசிவம் அளித்த புகாரின் பேரில் 5 வி.சி.க. நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Dec 11, 2024 13:58 IST

    வன்னியர்கள் உள் ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    வன்னியர்களுக்கு 10.5சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் டிசம்பர் 24-ந் தேதி பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்ட தலைநகர் மற்றும் வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Dec 11, 2024 13:39 IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம்: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 11, 2024 13:09 IST

    பைக் டாக்ஸி - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

    வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரத்தில்  அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

    "பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

    பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது" என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். 



  • Dec 11, 2024 13:00 IST

    பாரதியார் பிறந்தநாள் - பவன் கல்யாண் பதிவு 

    "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்" என்று மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தள பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.



  • Dec 11, 2024 12:53 IST

    பாரதியார் பிறந்தநாள் - ஸ்டாலின் பதிவு 

     

    "உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்;தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய" என பாரதியார் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 



  • Dec 11, 2024 12:22 IST

    மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

    லக்கி பாஸ்கர் பட கதாநாயகன் போல் சம்பாதித்து திரும்புகிறோம் எனக் கூறி ஹாஸ்டலில்
    இருந்து  9ம் வகுப்பு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர். மாயமான 4 மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தியுள்ளனர். 



  • Dec 11, 2024 12:21 IST

    மாநிலங்களவை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம். ஒன்றிய அமைச்சர்களை மட்டும் பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 



  • Dec 11, 2024 12:15 IST

    இந்தியாவின் கவனம் இதை நோக்கி திரும்பும் - ஸ்டாலின்

    “நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 



  • Dec 11, 2024 12:11 IST

    கேரளா சென்றடைந்த ஸ்டாலின் - பெரியார் நினைவகம் நாளை திறப்பு 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.



  • Dec 11, 2024 11:05 IST

    ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



  • Dec 11, 2024 11:02 IST

    சென்னையில் மழை- கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து நெரிசல்

    சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.



  • Dec 11, 2024 10:40 IST

    சென்னையில் பரவலாக மழை

    சென்னையில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது.



  • Dec 11, 2024 10:38 IST

    மகாகவி சிலைக்கு ஆளுநர் மரியாதை

    மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • Dec 11, 2024 10:36 IST

    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Dec 11, 2024 10:16 IST

    11 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    சென்னை,செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், கடலூர்,விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உட்பட 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 11, 2024 10:14 IST

    லக்கி பாஸ்கரை பார்த்து தப்பி ஓடிய மாணவர்கள்

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துவிட்டு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோட்டம். பெற்றோர்கள் அளித்த புகாரையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.



  • Dec 11, 2024 10:04 IST

    சென்னையில் பரவலாக மழை

    சென்னையில் மெரினா, கிண்டி, வேளச்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.



  • Dec 11, 2024 09:34 IST

    டங்ஸ்டன் விவகாரம் - கனிமொழி 2 ஆவது நாளாக நோட்டீஸ்

    டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் அளித்துள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Dec 11, 2024 09:32 IST

    சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பதவியேற்பு

    ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று பதிவி ஏற்க உள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு எது சிறந்ததோ அதை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.



  • Dec 11, 2024 09:12 IST

    இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பு?

    அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.



  • Dec 11, 2024 08:55 IST

    நான்குமைந்த தாழ்வு பகுதி - டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

    இலங்கை மற்றும் தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகர்ந்த நன்குமைந்த தாழ்வு பகுதி, மேலும் தீவிரமடைந்து டெல்டா கடற்கரையில் நிலைக்கொள்ளும் என்பதால் அடுத்த 36 மணி நேரத்திற்கு அதித கனமழை பெய்யும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும் விட்டு விட்டு கனமழை பதிவாகும். 



  • Dec 11, 2024 08:42 IST

    500 தாழ்தள பேருந்துகள் அறிமுகம்

    சென்னை, கோவை, மதுரையில் இயக்குவதற்கு 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்துறை டெண்டர் கோரியது. ஏசி அல்லது ஏசி அல்லாத 2 வகையாக பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் 500 பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் கோவை, மதுரையிலும் இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.



  • Dec 11, 2024 08:21 IST

    டங்ஸ்டன் சுரங்கம்-திருமா வலியுறுத்தல்

    மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட கோரி விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்யப்போவதில்லை என மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார்.  



  • Dec 11, 2024 08:17 IST

    சென்னையில் மழை

    சென்னையில் இன்று பிற்பகல் முதல் கனமழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



  • Dec 11, 2024 08:15 IST

    Bike-Taxi ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை?

    வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை  எடுக்க அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 



  • Dec 11, 2024 08:14 IST

    மசூதியின் ஒரு பகுதி இடித்து அகற்றம்

    உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள 185 ஆண்டு பழமையான மசூதியின் ஒருபகுதி இடித்து அகற்றப்பட்டது.  ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



  • Dec 11, 2024 08:11 IST

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட்!

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரங்ச் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Dec 11, 2024 07:42 IST

    பாரதியார் படைப்புகளின் தொகுப்பு வெளியீடு

    மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணிக்கு பிரதமர் மோடி வெளியிடுகிறார். நூல் தொகுப்பில் பாரதியார் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.



  • Dec 11, 2024 07:38 IST

    சக்தி காந்த தாஸுக்கு பிரியா விடை

    ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் பிரியாவிடை அளித்து ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment