Advertisment

Tamil News Highlights: விடிய விடிய பெய்த கனமழை.. தென்காசி சங்கர நாராயணர் கோயிலில் தேங்கிய நீர்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தென்காசி

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

மழை நிலவரம்: அரியலூர்,தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழையும் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 12, 2024 23:35 IST

    குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: காவல்துறை எச்சரிக்கை

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Dec 12, 2024 23:33 IST

    எலும்பு முறிவு மருத்துவமனையில் தீவிபத்து

    திண்டுக்கல்: திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.



  • Advertisment
    Advertisement
  • Dec 12, 2024 21:18 IST

    இந்த வெற்றியால் இன்று இரவு தூங்கப்போவதில்லை: செஸ் சாம்பியன் குகேஷ்

    என் வாழ்க்கையில் மிக சிறந்த தருணம். 7 வயதில் செஸ் விளையாட தொடங்கியதில் இருந்தே இந்த மாதிரி ஒரு தருணத்தை உருவாக்க,  கனவாக கொண்டிருந்தேன். அதனால் இப்போது எனது கனவில் வாழ்வது போல் உள்ளது. இந்த வெற்றியால் இன்று இரவு தூங்கப்போவதில்லை என்று செஸ் சாம்பியன் குகேஷ் கூறியுள்ளார்.

     



  • Dec 12, 2024 20:32 IST

    மாநிலங்களையே ஒழிக்கதான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின்

    "மாநிலங்களையே ஒழிக்கதான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும். பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் முதலமைச்சர் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்" என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Dec 12, 2024 20:26 IST

    உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

    உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குகேஷின் வெற்றி ஒரு வரலாறு மற்றும் முன்னுதாரணம். இவரின் வெற்றி அவரது பெயரை வரலாற்றில் பொறித்தது மட்டுமல்லாமல் இளைஞர்களை கனவு காண தூண்டியுள்ளது.



  • Dec 12, 2024 20:23 IST

    கனமழை எதிரொலி: தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    தொடர் மழை காரணமாக நாளை தென்காசி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 12, 2024 18:44 IST

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

    டி.என்.பி.எஸ்.சி குருப் 2 மற்றும் குருப் 2 ஏ தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in/  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வு நடைபெற்ற 57 வேலை நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.



  • Dec 12, 2024 17:46 IST

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்



  • Dec 12, 2024 17:25 IST

    3 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 12, 2024 17:11 IST

    சீமான் சென்ற விமானம் மதுரையில் தரையிறங்குவதில் சிக்கல்

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்ற விமானம் மதுரையில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக சுமார் 20 நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தது 



  • Dec 12, 2024 16:52 IST

    மகாதீபம்; திருவண்ணாமலை விரையும் தேசிய பேரிடர் மீட்புக் குழு

    தொடர் கனமழை மற்றும் மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தீபக் தலைமையில் 30 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை விரைகிறது.



  • Dec 12, 2024 16:44 IST

    மசூதி வழக்குகள் – உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என முகலாயர் காலத்தில் இந்து கோயில்கள் இருந்தன என கூறும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Dec 12, 2024 16:26 IST

    3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (12.12.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Dec 12, 2024 16:08 IST

    16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Dec 12, 2024 15:48 IST

    தமிழகம் முழுவதும் மேகக்கூட்டங்கள்; பரவலாக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால், மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளன. இதனால் பரவலாக மிதமான மழையும், ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Dec 12, 2024 15:34 IST

    மழைநீரில் சிக்கிய பேருந்து - பயணிகள் அவதி

    திண்டிவனம் அருகே ரயில்வே மேம்பாலத்தை கடக்கும் போது, மழை வெள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்



  • Dec 12, 2024 15:15 IST

    சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூடல்

    மழை காரணமாக விமான நிலையம் அருகில் உள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மற்ற 20 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை



  • Dec 12, 2024 15:00 IST

    மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்

    தொடர் கனமழை காரணமாக கார் பார்க்கிங்காக மாறியுள்ளது வேளச்சேரி மேம்பாலம். மழையில் இருந்து கார்களை பாதுகாக்க மேம்பாலங்களில் கார்களை  உரிமையாளர்கள் நிறுத்தி வருகிறார்கள். 



  • Dec 12, 2024 14:40 IST

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா  - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இச்சட்டம் வகை செய்யும். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 12, 2024 14:29 IST

    பூண்டி ஏரி திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு 

    தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  



  • Dec 12, 2024 13:55 IST

    பெண்களுக்கு மாதம் ரூ 1000  -  கெஜ்ரிவால் அறிவிப்பு 

    டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.. 



  • Dec 12, 2024 13:50 IST

    பாறைகள் சரிவு 

    திருப்பதி, திருமலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை. பாறையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 



  • Dec 12, 2024 13:47 IST

    கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி தண்ணீர் திறப்பு! 

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது, அது 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது 



  • Dec 12, 2024 13:20 IST

    விமானநிலையத்தில் அருவி போல் கொட்டும் மழைநீர்

    சென்னை விமானநிலையத்தில் மின்விளக்குகள் வழியாக மழைநீர் அருவி போல் கொட்டி வருகிறது. இதனைப் பார்த்து விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழையால் மின்விளக்குகளில் புகுந்த தண்ணீர் புகுந்துள்ளது . முதலாவது முனையத்தில் பயணிகள் செல்லும் பாதையில்  மழைநீர் கொட்டி வருகிறது. 



  • Dec 12, 2024 13:08 IST

    பி.எஃப் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கும் வசதி அறிமுகம் 

    "பி.எஃப் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கும் வசதி வருகிற மே மற்றும் ஜூன் 2025-க்குள் அமல்படுத்தப்படும். டெபிட் கார்டை போல காட்சி அளிக்கும் ஒரு ஏ.டி.எம் கார்டு இதற்காக ஈ.பி.எப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்" என்று ஈ.பி.எப்.ஓ அறிவித்துள்ளது. 



  • Dec 12, 2024 13:07 IST

    சென்னையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 

    விட்டு விட்டு பெய்த கனமழையால் சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் பாண்ஸ் மேம்பால இறக்கம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதேபோல்,  தி.நகர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பாண்டிபஜார் சாலையில் 2 அடி வரை மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரில் இயக்கப்படும் வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன



  • Dec 12, 2024 13:05 IST

    சமூக நீதியின் காவலர் - பெரியார் குறித்து முதல்வர் பினராயி விஜயன்

    "சமூக நீதியின் காவலராக திகழ்ந்தவர் தந்தை பெரியார்" என்று வைக்கம் போராட்ட100ம் ஆண்டு நிறைவு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



  • Dec 12, 2024 12:53 IST

    பெரியார் குறித்து அண்ணா பேசியதை நினைவுகூர்ந்து பேசும் முதல்வர் ஸ்டாலின்!

    "பெரியார் நினைவகத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வரலாற்று பெருமை. பெரியாரின் வெற்றி திராவிட இயக்கத்தின் வெற்றி. பெரியார் நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த கேரளா அரசுக்கு நன்றி. கல்வியில் முன்னேறிய மாநிலம் கேரளம். 

    கேரளா வரும் எல்லாரும் வைக்கம் நினைவகத்தை பார்வையிட வேண்டும். சமூக கொடுமையை எதிர்த்து நடந்தது வைக்கம் போராட்டம். 5 மாதம் காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார் பெரியார். சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றிச் சின்னமாக நினைவகம் உள்ளது. தீண்டாமையை ஒழிக்க திருவிதாங்கூரில் எடுத்த முயற்சி முக்கியமானது. கேரள - தமிழக சமூக சீர்திருத்தவாதிகள் ஒன்றாக இணைந்து வைக்கம் போராட்டத்தை நடத்தினார்கள்

    சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறோம். நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க முடியவில்லை.எல்லோருக்கும் எல்லாம் என்று அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆட்சி ரீதியாகவும் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டை போலவே கேரளாவில் முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன." என்று வைக்கம் போராட்டத்தை நினைவுகூர்ந்து பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். 



  • Dec 12, 2024 11:56 IST

    இருள் சூழ்ந்த சென்னை

    சென்னை மாநாகரில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் சற்று மழை ஓய்ந்ததையடுத்து  சென்னை மாநகரின் பல பகுதிகளில் கருமேக கூட்டங்கள் சூழ்ந்தன.



  • Dec 12, 2024 11:34 IST

    வேகமாக நிரம்பும் புழல் ஏரி

    கனமழை பெய்து வருவதால் புழல் ஏரியின் நீர்மட்டம் 18.80 அடியாக உயர்ந்துள்ளது.



  • Dec 12, 2024 11:32 IST

    வீடுகளை சூழ்ந்த மழைநீர்

    திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



  • Dec 12, 2024 11:24 IST

    வேகமாக நிரம்பி வரும் பூண்டி ஏரி

    தொடர் மழையால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடியில் இருந்து 34.05 அடியை எட்டியுள்ளது. மேலும் வேகமாக நிரம்பி வரும் நிலையில் பிற்பகல் 1.30 மணிக்கு திறக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Dec 12, 2024 11:23 IST

    பெரியார் நினைவகம் திறப்பு

    வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8.14 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் இணைந்து திறந்து வைத்தனர்.



  • Dec 12, 2024 11:13 IST

    கனமழையால் அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கனமழையால் அடியோடு 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.



  • Dec 12, 2024 10:58 IST

    தொடர் மழையால் வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

    தொடர்ந்து மழைபெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.



  • Dec 12, 2024 10:56 IST

    சென்னையில் இன்று இரவு முதல் மழை

    மழைப்பொழிவு பட்டியலில் நாகை மற்றும் சென்னை முதலிடத்தில் உள்ளது. மன்னார் வளைகுடா அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் மேகங்கள் நகர்ந்து நாளை தமிழகத்தை கடந்து அரபிக்கடலுக்கு செல்லும். மேலும் சென்னையில் இன்று இரவு முதல் நல்ல மழை பெய்யும் எனவும் நாளை முதல் வறண்டு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



  • Dec 12, 2024 10:40 IST

    புதுச்சேரி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    புதுச்சேரியில் சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் முகாம்களுக்கு செல்ல ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.



  • Dec 12, 2024 10:24 IST

    அறுவடைக்கு தயாரான நெற்பயிற்கள் சேதம்

    கனமழை பெய்து வருவதால் திருவாரூர் அருகே அறுவடைக்கு தயாரான நெல்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்தன. 



  • Dec 12, 2024 10:21 IST

    சாத்தனூரில் 13,000 கன அடி நீர் திறப்பு

    சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 13,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.



  • Dec 12, 2024 10:19 IST

    காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு

     வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்பு என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவ்த்துள்ளது.



  • Dec 12, 2024 09:48 IST

    கரூர்: மாயனூர் கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

    காவிரியில் வினாடிக்கு 4,121 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. மாயனூர் கதவனைக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.



  • Dec 12, 2024 09:27 IST

    அடுத்த அரை மணி நேரத்தில் தென் சென்னையில் கனமழை

    அடுத்த அரைமணி நேரத்தில் தென் சென்னையில் கனமழை பெய்யும் எனவும் அடுத்த 3 மணி நேரங்களில் சென்னையில் எங்கெங்கு மழை பெய்யும் என்ற வரைபடத்தையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.



  • Dec 12, 2024 09:05 IST

    கோயம்பேட்டை சூழ்ந்த மழைநீர்

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் சாலைகளில் தேங்கிய மழைநீர் கடைகளை சூழ்ந்ததால் வெள்ளத்தால் வியாபாரிகள் அவதி அடைந்தனர். 



  • Dec 12, 2024 08:56 IST

    சாத்தனூர் நீர்திறப்பு 10,000 கன அடியாக அதிகரிப்பு

    சாத்தனூர் நீர்திறப்பு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. 



  • Dec 12, 2024 08:15 IST

    சென்னையில் 15 விமானங்கள் தாமதம்

    சென்னையில் நேற்றிரவு முதல் தொடரும் மழையால் 15 விமானங்கள் தாமதமாகியுள்ளன. சார்ஜா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூருக்கு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. டெல்லி, மும்பை, திருச்சி, கோவை, கொச்சி புறப்படும் விமானங்களும் தாமதம். சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்து சற்று நேரம் கழித்து தரையிறக்கம்; சென்னை வரும் விமானங்கள் 10 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்குகின்றன.



  • Dec 12, 2024 08:11 IST

    சென்னையில் விட்டு விட்டு மழை

    தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேகங்கள் சென்னையை நோக்கி நகருவதால் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து ஓய்ந்த மழை சற்று நேரத்தில் மீண்டும் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். 



  • Dec 12, 2024 07:36 IST

    இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் வைக்கம் போராட்ட நிறைவு விழா

    வைக்கம் போராட்டத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார்.



  • Dec 12, 2024 07:33 IST

    23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 12, 2024 07:30 IST

    சென்னையில் பரவலாக மழை

    சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை கனமழை பெய்து வருகிறது.



  • Dec 12, 2024 07:29 IST

    கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment