பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது. அந்த வகையி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
மழை நிலவரம்: வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் இன்று 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 13, 2024 21:59 IST
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
"ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது, மக்களாட்சிக்கு விரோதமானது, கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும். திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில் மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 21:34 IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 , 4 தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்
தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடட்திட்டமும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https//tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https//tnspscc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்று டி.என்.பி.எஸ்.சி ச. கோபால சுந்தர ராஜ் அறிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 21:13 IST
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லூரிகள் தேர்வு ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் அறிவித்துள்ளது.
-
Dec 13, 2024 20:43 IST
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 20:23 IST
சேலத்தில் 713 மில்லி மீட்டர் மழை!
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்): சேலம் 16 , ஏற்காடு 42, வாழப்பாடி 56, ஆணைமடுவு 58, ஆத்தூர் 67, கெங்கவல்லி 75, தம்மம்பட்டி 88, ஏத்தாப்பூர் 63, கரியகோவில் 55, வீரகனூர் 85, நத்தக்கரை 32, சங்ககிரி 15, இடைப்பாடி 15, மேட்டூர் 13, ஓமலூர் 14, டேனிஷ்பேட்டை 17 என மாவட்டம் முழுவதும் 713 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
-
Dec 13, 2024 20:12 IST
திருமாவுக்கு அழுத்தம் கொடுத்தது தி.மு.க - ஆதவ் அர்ஜுனா பேச்சு
"விஜய் பங்கேற்ற புத்தக வெளியிட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்தது தி.மு.க" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
-
Dec 13, 2024 20:09 IST
தேர்வுகள் ஒத்திவைப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் அறிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 19:55 IST
தூத்துக்குடியில் விடுமுறை
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அரவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 19:54 IST
நெல்லையில் விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக் கூடாது என்று நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 19:32 IST
சூர்யா 45’ படத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா இணைந்தார் போஸ்டரை பகிர்ந்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Dec 13, 2024 19:30 IST
சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்வு
மும்பை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 1.48% சரிந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் 1% உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் முற்பகலில் 1,207 புள்ளிகள் சரிந்து 80,082 புள்ளிகளுக்கு சரிந்தது. நண்பகலில் உயரத் தொடங்கிய சென்செக்ஸ் 924 புள்ளிகள் வரை உயர்ந்து இறுதியில் 843 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. தொடக்க நேர சரிவான 80,082 புள்ளிகளில் இருந்து 2,131 புள்ளிகள் உயர்ந்து 82,214 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 220 புள்ளிகள் உயர்ந்து 24,768 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெருத்தது.
-
Dec 13, 2024 19:14 IST
இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது அ.தி.மு.க: அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம்
பா.ஜ.க-வுடன் கள்ளக்கூட்டணி அம்பலம்; இரட்டை வேடம் போட்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது அ.தி.மு.க என்று அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். 'கையெழுத்திட மறுத்து இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை அதிமுக செய்துள்ளது. கையெழுத்திட மறுத்ததன் மூலம் பா.ஜ.க-வுடன் களக் கூட்டணியை எடப்பாடி தொடர்வது அம்பலமாகி உள்ளது. அ.தி.மு.க-வை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர்கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை' என்று அவர் கூறியுள்ளார்.
-
Dec 13, 2024 19:06 IST
தொடர் மழை - தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 17:48 IST
அல்லு அர்ஜூனுக்கு ஐகோர்ட் ஜாமீன்
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது
-
Dec 13, 2024 17:46 IST
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு வரும் - அண்ணாமலை
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு வரும். தமிழகத்தை பொறுத்தவரை இந்த டங்ஸ்டன் திட்டத்தை திரும்ப பெறுவதை தவிர வேறு வழியில்லை. மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என டெல்லியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Dec 13, 2024 17:33 IST
நீலகிரியில் 5 பழங்குடியின கிராமங்களுக்கு மின்தடை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைபாதையில், மழையின் காரணமாக டிரான்ஸ்பார்மர் உடைந்து விழுந்ததால் 5 பழங்குடியின கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது
-
Dec 13, 2024 17:08 IST
ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பெய்துள்ளது - பாலச்சந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 54 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
-
Dec 13, 2024 16:47 IST
அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
-
Dec 13, 2024 16:41 IST
அல்லு அர்ஜுன் வழக்கு - தெலங்கானா முதல்வர் கருத்து
அல்லு அர்ஜுன் வழக்கின் விசாரணையில், சட்டம் அதன் போக்கை எடுக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்
-
Dec 13, 2024 16:15 IST
அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் ஆஜர்
மருத்துவ பரிசோதனைக்கு பின் நடிகர் அல்லு அர்ஜுன் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
Dec 13, 2024 15:56 IST
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால், குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் அருவி பகுதிகளில் உள்ள கைப்பிடி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க, தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Dec 13, 2024 15:31 IST
திண்டிவனம்: ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
-
Dec 13, 2024 15:21 IST
திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை மகா தீபத்திருவிழாவை ஒட்டி, கிரிவலப் பாதையில் லட்சக் கணக்காண பக்தர்கள் குவிந்துள்ளனர். விண்ணை பிளக்கும் 'அரோகரா' முழக்கத்துடன் அண்ணாமலையானை தரிசிக்க கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
-
Dec 13, 2024 15:01 IST
நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்
ரேணுகாசாமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தர்ஷனின் காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
Dec 13, 2024 14:39 IST
வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
கடலூர் மாவட்டம், வானமாதேவி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 6 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் மீட்டனர்.
-
Dec 13, 2024 14:10 IST
குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
சிற்றாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குற்றாலம் செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு சிற்றாற்றில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Dec 13, 2024 13:45 IST
நெல்லைக்கு ரெட் அலர்ட்
நெல்லை மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுகோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 13:39 IST
ரூ. 5 கோடி பரிசு அறிவிப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Dec 13, 2024 13:01 IST
கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை மரணம்: நடிகர் அல்லு அர்ஜூன் கைது
புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த தெலுங்கானா போலீசார் தற்போது நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்துள்ளனர்.
-
Dec 13, 2024 12:36 IST
அடையாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்: பொதுமக்கள் வெளியேற்றம்
தமிழகம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வருவதால், 47 ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதி மக்களை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
-
Dec 13, 2024 12:34 IST
நெல்லையில் திரிபுராந்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் திரிபுராந்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. ஒரு அடி உயரத்திற்கு கோயில் பிரகாரத்தில் தேங்கிய மழைநீரை மின்மோட்டர் மூலம் கோவில் ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
-
Dec 13, 2024 12:31 IST
கனமழையால் உடைந்த குளம்: செங்கோட்டை - கொல்லம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் விஸ்வநாதபுரம் என்ற இடத்தில் குளம் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் 6 மணிநேரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 12:29 IST
வங்கக்கடலில் டிசம்பர் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் டிசம்பர் 16-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வலிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு கடற்கரை பகுதகளை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Dec 13, 2024 12:06 IST
ஒரே நாடு ஒரே தேர்தல், மசோதாவை முடிந்தவரை எதிர்ப்போம்: மு.க.ஸ்டாலின்
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல், மசோதாவை எங்களால் முடிந்தவரை எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
-
Dec 13, 2024 11:38 IST
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
-
Dec 13, 2024 11:35 IST
திருப்பூர் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் கொஞ்சமும் குறையாமல் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 10:59 IST
கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை
தொடர் மழையால் நாமக்கல் கொல்லிமலை அருவிகளில் குளிக்க பொதுமக்கள் தடை விதித்துள்ளனர்.
-
Dec 13, 2024 10:49 IST
செம்பரம்பாக்க ஏரியில் இருந்து கூடுதலாக நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4.000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 10:47 IST
திருவண்ணாமலை வரும் குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை!
திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறை சார்பில் அவர்களது கையில் பெயர், பெற்றொர் பெயர், தொலைபேசி எண் அடங்கிய டேக் போடப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 10:27 IST
பாரதிதாசன் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் அறிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 10:21 IST
வயில்வெளிகளில் புகுந்த மழைநீர்
தூத்துக்குடி வயல் வெளிகளுக்குள் புகுந்த ஓடை நீர் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, நெற்பயிர்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
-
Dec 13, 2024 10:18 IST
மாஞ்சோலை பகுதியில் மண்சரிவு
திருநெல்வேலி: மாஞ்சோலை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து சாலையில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Dec 13, 2024 10:01 IST
திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு
டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.பி.க்களும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்வைக்கு வந்திருக்க வேண்டும். முக்கியமான மசோதாக்களின் மீதான விவாதம் நடைபெற இருப்பதால்ி.மு.க எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவிட்டுள்ளது.
-
Dec 13, 2024 09:25 IST
தென்காசியில் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த நீர்
இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் தத்தளிக்கும் தென்காசியில் குளம் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக செங்கோட்டை - கேரளா சாலையில் வெள்ளப்பெருக்கு. வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிகப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
-
Dec 13, 2024 09:23 IST
வீராணம் ஏரி நிலவரம்
கன மழையால் வீராணம் ஏரியில் இருந்து 19,410 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுகிறது.
-
Dec 13, 2024 08:50 IST
ஸ்ரீவைகுண்டம், ஏரலுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம், ஏரலுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 08:45 IST
கொடைக்கானல் மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழையால் பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 08:06 IST
வெள்ள அபாய எச்சரிக்கை
உடுமலை அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 13, 2024 08:03 IST
வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை மாவட்டம் வால்பாறையில் மட்டும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Dec 13, 2024 07:45 IST
தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தாமிரபரணியில் தற்போது வெள்ள அபாய கட்டத்தை எட்டவில்லை என்றாலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.