Advertisment

Tamil News Highlights: வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heavy rainfall

மழை நிலவரம்: வங்கக்கடலில் நாளை மறுநாள்  புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 14, 2024 23:51 IST
    6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 14, 2024 21:54 IST
    அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

    நெல்லை மாவட்டத்தில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் கே.என். நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 14, 2024 21:37 IST
    மலை ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து

    உதகை - மேட்டுப்பாளையம் மற்றும்  உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை நாளை (டிச 15) முதல் மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 14, 2024 21:13 IST
    புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புழல் சிறை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். பலகட்ட சோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படும் சூழலில், வெடிகுண்டு எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • Dec 14, 2024 20:29 IST
    3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 14, 2024 20:04 IST
    பொதுமக்களை அப்புறப்படுத்திய போலீசார்

    திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள்ளப்பட்டு வருகிறது



  • Dec 14, 2024 19:47 IST
    "அம்பேத்கர் நினைவிடத்தை நிறுவியதே பா.ஜ.க தான்": மோடி

    நாக்பூரில் அம்பேத்கருக்கு நினைவிடம் நிறுவப்பட்டதே பா.ஜ.க ஆட்சியில் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், அம்பேத்கரின் நினைவிடம் கிடப்பில் போடப்பட்டதாக மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் தனது உரையில் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 14, 2024 19:46 IST
    சிறப்பு அந்தஸ்து 370 தடையாக இருந்தது - மோடி

    "சிறப்பு பிரிவான 370-ன் காரணமாக அம்பேத்கரின் அரசியல் சாசனம், ஜம்மு & காஷ்மீரை சென்றடயவில்லை" என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.



  • Dec 14, 2024 19:15 IST
    காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு

    "மக்களை அச்சமூட்டும் ஒரு கருவியாக அரசியல் சாசனத்தை காங்கிரஸ் பயன்படுத்துகிறது" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் தனது உரையின் போது மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.



  • Dec 14, 2024 19:04 IST
    வாக்கு வங்கியை திருப்திப்படுத்த மத அடிப்படையில் இடஒதுக்கீடு - மோடி குற்றச்சாட்டு 

    'மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்கியது. நீதிமன்றத் தீர்ப்புகளால் அவர்களது திட்டங்கள் குழப்பமடைந்துள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார். 



  • Dec 14, 2024 18:49 IST
    ஃபீஞ்சல் புயல் மறுசீரமைப்பு - சி.பி.எம் வலியுறுத்தல்

    ஃபீஞ்சல் புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய பாஜக அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 



  • Dec 14, 2024 18:45 IST
    'பதவியை காப்பாற்றவே எமர்ஜென்சி அமல்': மோடி பேச்சு 

    நேரு-காந்தி குடும்பத்தினர் தங்களது சொந்த நாற்காலியை காப்பாற்றுவதற்காக எமர்ஜென்சியை விதித்ததாகவும், அவர்கள் 39-வது திருத்தத்தையும் கொண்டு வந்தனர், ஜனாதிபதி, வி-பி, மற்றும் பிரதமர் தேர்தலை பிற்போக்குத்தனமாக யாராலும் சவால் செய்ய முடியாது. ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர், நீதிமன்றங்கள் தாக்கப்பட்டன, ‘உறுதியான நீதித்துறை’ என்ற யோசனைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார். 



  • Dec 14, 2024 18:41 IST
    குடும்பம் அரசியல் சாசனத்திற்கு சவால் விட்டது - பிரதமர் மோடி

    காங்கிரஸைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, குடும்பம் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் சாசனத்திற்கு சவால் விட்டதாகவும், சுதந்திரமான பேச்சுரிமையை தாக்கினார்கள். அவர்கள் அரசியலமைப்புச் சபையில் பேச்சுரிமை உரிமையைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அவர்களது முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்றும் கூறினார். 



  • Dec 14, 2024 18:38 IST
    'எமர்ஜென்சி கறையை கழுவ முடியாது' - மக்களவையில் மோடி பேச்சு 

    "இந்தியா அரசியலமைப்பின் 25 ஆண்டுகளைக் கொண்டாடியபோது, ​​​​எமர்ஜென்சி கொண்டு  வரப்பட்டது. அரசியலமைப்பு உரிமைகள் குறைக்கப்பட்டன. அரசியலமைப்பை இழிவுபடுத்தும் முயற்சிக்காக காங்கிரஸ் நினைவுகூரப்படும் என்றும், எமர்ஜென்சியை விதித்த கறையை கழுவ முடியாது" என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.. 



  • Dec 14, 2024 18:36 IST
    'நீ தானே என் பொன் வசந்தம்' - அன்பின் கொண்டாட்டம்!

    'நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் இசையானது ராஜா சார், எனக்காகவும், நமக்காகவும், முழு உலகத்திற்காகவும் செய்த அன்பின் கொண்டாட்டம்' என்று இயக்குநர்  கௌதம் மேனன் கூறியுள்ளார். 

     



  • Dec 14, 2024 18:25 IST
    ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் - மோடி பேச்சு 

    ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசி வருகிறார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது; அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். 75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு எனவும் அவர் பேசியுள்ளார். 



  • Dec 14, 2024 18:19 IST
    பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் 

    இன்றும், நாளையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



  • Dec 14, 2024 18:00 IST
    வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அணையின் பாதுகாப்பு கருதி 9 கதவுகள் வழியாக 8,139 கனஅடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சங்கராபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். வீடூர் கிராமத்தில் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் பொன்முடி உணவு வழங்கினார்.



  • Dec 14, 2024 17:59 IST
    கனமழை - மலை ரயில் சேவை ரத்து

    கனமழை எச்சரிக்கை காரணமாக ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 



  • Dec 14, 2024 17:23 IST
    தூத்துக்குடி ரயில்கள் மீளவிட்டான் நிலையத்தில் இருந்து புறப்படும் 

    தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 5 ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி – பாலக்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Dec 14, 2024 17:21 IST
    தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்யணும் - இ.பி.எஸ்-க்கு எதிராக வழக்கு 

    அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறு பரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு, தொடர் தோல்விகளால் மக்கள் மத்தியில் அ.தி.மு.க நம்பி க்கை இழந்து வருகிறது என்றும், திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின்  ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது என்றும் குறிப்பிட்டு அ.தி.மு.க உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் மனுத்தாக்கல்  செய்துள்ளனர். 
     



  • Dec 14, 2024 16:54 IST
    கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

    20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த எனது தலைமையில் குழு. ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்றுவது பற்றி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70% நிறைவு பெற்றுள்ளது,”  என்று அவர் கூறியுள்ளார். 



  • Dec 14, 2024 16:33 IST
    கோவில்பட்டி சிறுவன் படுகொலை - வெளியான அதிர்ச்சி தகவல் 

    கோவில்பட்டி சிறுவன் படுகொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பலவந்தமாக கொலை செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. போலீசார் தேடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான், சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 



  • Dec 14, 2024 16:29 IST
    கொடைக்கானலில் தொடர் மழை: நட்சத்திர ஏரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 

    கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழையால், நட்சத்திர ஏரியில் அதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Dec 14, 2024 16:26 IST
    திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு 

    வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் கனமழை எச்சரிக்கை மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதன் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 14, 2024 15:44 IST
    முல்லை பெரியாறு அனையை திமுக தாரைவார்ப்பதை அனுமதிக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

    முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? இது தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்க்கும் செயல் 'முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கும் உரிமை முழுக்க முழுக்க தமிழக அரசின் நீர்வளத்துறைக்கே' தமிழ்நாட்டின் நலன்களை கர்நாடகா, கேரளாவிடம் திமுக அரசு தாரைவார்ப்பதை அனுமதிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.



  • Dec 14, 2024 15:11 IST
    மக்களவையில் அதானி பற்றி ராகுல்காந்தி பேச்சு: ஆளுங்கட்சியினர் ஆட்சேபம் 

    நாட்டிலுள்ள விமானங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு கொடுத்துவிட்டீர்கள் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேச்சுக்கு, ஆளுங்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.



  • Dec 14, 2024 14:00 IST
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 



  • Dec 14, 2024 13:52 IST
    6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 14, 2024 13:33 IST
    புழல் ஏரியில் 1000 கன அடி நீர் திறப்பு

    புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் கரையோரம் வசிப்பவர்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



  • Dec 14, 2024 13:22 IST
    தென் மாவட்ட வெள்ள பாதிப்பு; ஸ்டாலின் ஆலோசனை

    தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்



  • Dec 14, 2024 13:02 IST
    காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு

    நாளை அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Dec 14, 2024 12:58 IST
    சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை

    நெல்லை அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகளின் நீரும் சேர்ந்து வருவதால், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Dec 14, 2024 12:37 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு விஜய் இரங்கல்

    "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Dec 14, 2024 12:36 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு சத்தியமூர்த்தி பவனில் நாளை அஞ்சலி

    சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் நாளை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது 



  • Dec 14, 2024 12:32 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு - மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. ஒரு நேர்மையான மற்றும் தைரியமான தலைவர், ஒருமித்த கருத்தை உருவாக்குபவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Dec 14, 2024 12:23 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு பிரேமலதா இரங்கல்

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Dec 14, 2024 12:21 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு - ஸ்டாலின் இரங்கல்

    "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Dec 14, 2024 12:01 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம்; மருத்துவனை அறிக்கை

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று காலை 10.15 மணிக்கு மரணமடைந்தார் என சிகிச்சை பெற்ற மருத்துவனை மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Dec 14, 2024 11:41 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் நாளை தகனம்

    மறைந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல், நாளை ராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சத்தியமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் கட்சி கொடி பறக்க விடப்பட்டுள்ளது.



  • Dec 14, 2024 11:23 IST
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

    தமிழகத்தில் மிக நெருக்கடியான கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்தியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Dec 14, 2024 11:17 IST
    காங்கிரஸ் இயக்கத்திற்கு பேரிழப்பு – செல்வப்பெருந்தகை

    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர் இளங்கோவன். எதையும் வெளிப்படையாக பேசுபவர். எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Dec 14, 2024 11:14 IST
    பாடகி இசைவாணி புகார்; 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகார் அளித்ததையடுத்து, சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்



  • Dec 14, 2024 10:58 IST
    அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    "இந்து சமய அறநிலையத்துறை திட்டங்கள் தொடர்பாக CAG அறிக்கையில் கூற்றப்பட்டவை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படும்” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.



  • Dec 14, 2024 10:57 IST
    ஈவிகேஸ் இளங்கோவன் மறைவு - தமிழிசை இரங்கல்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்; அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Dec 14, 2024 10:55 IST
     ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்.சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் உயிரிழந்தார்.



  • Dec 14, 2024 10:24 IST
    ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.6500

    சங்கரன் கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 6500க்கு ஏலம் போனது.மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதாலும் கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வதாலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 14, 2024 10:03 IST
    கே.என். நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்

    கனமழை பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.



  • Dec 14, 2024 09:42 IST
    நடிகர் அல்லு அர்ஜுன் பேட்டி

     "இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்" என்று நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.



  • Dec 14, 2024 09:35 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிச.16ல் தாக்கல்!

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிசம்பர் 16யில் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவைாக்கல் செய்கிறார். 



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment