Advertisment

Tamil News Highlights: சென்னை நகரில் 4 ஆவது ரயில் முனையமாக பெரம்பூரை மாற்றுவது குறித்து ரயில்வே அறிவிப்பு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:  சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

நீர் வெளியேற்றம்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 8,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 16, 2024 22:32 IST
    அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு ரத்து 

    கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தேர்வர்கள் முறையீடு செய்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி, ஓஎம்ஆர் அடிப்படையில் நடைபெறும் என  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.



  • Dec 16, 2024 22:10 IST
    பா.ஜ.க.வின் அராஜக போக்கை முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை

    ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாட்டு மக்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் எதேச்சதிகார போக்குடன் ஆளும் பாசிச பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். பாஜகவின் இது போன்று மக்கள் விரோத  அராஜக போக்கினை நாட்டு மக்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்"  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Dec 16, 2024 21:13 IST
    முயற்சிப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    நிவாரணம் கேட்டு போராடும் மக்களை ஒடுக்குமுறை மூலம் அடக்க முயற்சிப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறும் ரூ. 2000 நிவாரண உதவியாக வழங்கிவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Dec 16, 2024 20:55 IST
    தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அதிபருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி, இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சனை குறித்து பேசியதைக் குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Dec 16, 2024 20:38 IST
    புதுமைப்பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவிகள்

    புதுமைப்பெண் திட்டத்தால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்ததாக மாநில திட்டக்குழுவின் மதிப்பீடு அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 16, 2024 20:22 IST
    12 நாட்களில் ரூ.1409 கோடி வசூல் 

    அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 12 நாட்களில் ரூ.1409 கோடி வசூலை எட்டியது. 



  • Dec 16, 2024 20:09 IST
    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 சதவீத குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அளித்த மதிப்பீடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு ஆகியவையும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 16, 2024 19:44 IST
     கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது - பினராயி விஜயன் கண்டனம்

    கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது என பேரிடர் மீட்புப் பணி செய்ததற்காக கட்டணம் கேட்ட மத்திய அரசுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசு கேரள மக்களை பழிவாங்குகிறது. வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 கிராமங்கள் அழிந்தன. ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. இத்தகைய பேரழிவு நடந்தபோதிலும் பா.ஜ.க அரசு கேரளாவைக் கண்டு கொள்ளவில்லை. இதுவரை கேரளாவுக்கு எந்த நிவாரண நிதியும் மத்திய அரசு வழங்க வில்லை. கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை மோடி உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்



  • Dec 16, 2024 19:34 IST
    இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள்

    இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. சுதா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் பதில் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “தமிழ்நாட்டு மீனவர்களின் 198 படகுகளை சிறைப்பிடித்து முடக்கி வைத்துள்ளது இலங்கை அரசு. சிறையில் அடைக்கப்பட்ட 141 தமிழ்நாட்டு மீனவர்களில் 96 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ளனர். வங்கதேச சிறையில் 95 இந்திய மீனவர்கள், 6 படகுகள், பாகிஸ்தானில் 214 பேரும், 1472 படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன." என்று கூறியுள்ளார். 

     



  • Dec 16, 2024 19:19 IST
    புகழேந்தி ஆஜராக உத்தரவு

    அ.தி.மு.க தொடர்பான நிலுவை மனுக்கள் குறித்த விசாரணைக்கு 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிச.24ம் தேதி காலை 11 மணிக்கு புகழேந்தி நேரில் ஆஜராகுமாறு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

    நிலுவையில் உள்ள புகழேந்தியின் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணைய செயலர் அஸ்வினி குமார் உத்தரவின்படி, மாநில தேர்தல் தலைமை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகழேந்தியின் மனுக்களை பரிசீலிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் கடித நகல் கிருஷ்ணகிரி ஆட்சியர் மூலமாக அவசர கடிதமாக புகழேந்தி இல்லத்தில் வழங்கப்பட்டது.



  • Dec 16, 2024 19:08 IST
    தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் - பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்

    "இலங்கை மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறை தண்டனை விதிக்கப்படுவதும், அபராதம் விதிக்கப்படுவதும் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    எனவே இதற்கான நிரந்தர தீர்வை உடனடியாக காணும் வகையில், இலங்கை அதிபர் நம்முடைய நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இத்தகைய தருணத்தில் வலியுறுத்திட வேண்டும் என பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.  



  • Dec 16, 2024 19:00 IST
    தலையில் கடப்பாரை பாய்ந்து விபத்து

    நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையம் 2 விரிவாக்கத்தின் போது தலையில் கடப்பாரை பாய்ந்து விபத்து நேர்ந்துள்ளது.  பீகாரை சேர்ந்த தொழிலாளி சேவாக்கின் தலையில் கடப்பாரை பாய்ந்தது. ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும், ஹெல்மெட்டை துளைத்துக் கொண்டு தலையில்  கடப்பாரை பாய்ந்துள்ளது. படுகாயம் அடைந்த தொழிலாளி சேவாக் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்



  • Dec 16, 2024 18:58 IST
    அனு ஜார்ஜ் விடுப்பு - முதல்வரின் செயலர்களுக்கு துறைகள் மாற்றியமைப்பு

    தமிழ்நாடு முதல்வரின் செயலர்களுக்கு துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாட்கள் விடுப்பில் செல்ல இருப்பதால் துறைகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Dec 16, 2024 18:25 IST
    3 ஆண்டுகளில் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு

    3 ஆண்டுகளில் மட்டும் பால் விற்பனை 7 லட்சம் லிட்டராக அதிரித்துள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவன பால் விற்பனை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிர்வாகம் பால் விற்பனை செய்து வருகிறது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை என்றும் கூறினார்.



  • Dec 16, 2024 17:54 IST
    சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிவு 

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் சரிந்து 81,749 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தின்போது 582 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருந்த சென்செக்ஸ் இறுதியில் சற்று முன்னேறி முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. 

    தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 24,668 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது. டைட்டன் பங்கு 2.1% அதானி போர்ட்ஸ், டி.சி.எஸ்., அல்ட்ரா டெக் சிமென்ட் பங்குகள் 1% விலை குறைந்து வர்த்தகமாயின. என்.டி.பி.சி., பார்த்தி ஏர்டெல், டெக் மகிந்திரா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், இன்போசிஸ் பங்குகள் 1% விலை குறைந்து விற்பனையாயின. இந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல். டெக், டாடா ஸ்டீல், நெஸ்லே உள்ளிட்ட பங்குகளும் விலை குறைந்தன. 



  • Dec 16, 2024 17:53 IST
    ராகுல் காந்தி கடிதம் - ஜெய்சங்கர் பதில் 

    இலங்கை அதிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். 



  • Dec 16, 2024 17:38 IST
    டாஸ்மாக்கில் கைவரிசை

    மாமல்லபுரம் அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு குடிப்பதற்கு ஏற்ப அளவாக 5 குவாட்டர் பாட்டில்கள், ரூ.12,000 திருடப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்டது சிறுவர்களாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். 

     



  • Dec 16, 2024 17:35 IST
    ``என்னை வைத்து வதந்தி பரப்புகிறார்கள்'' - இளையராஜா விளக்கம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக இளையராஜா கூறியுள்ளார். 

    "என்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள், இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் " என்று குறிப்பிட்டு இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். 



  • Dec 16, 2024 17:34 IST
    'சங்கீத கலாநிதி' விருது - பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை 

    `சங்கீத கலாநிதி' விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம் கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

     



  • Dec 16, 2024 17:01 IST
    ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்காதது கண்டனத்துக்குரியது - நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரி: “இளையராஜா ஒரு இசைக்கடவுள்; அவரை கோயிலுக்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது; அர்த்த மண்டபத்துக்குள் போக வேண்டாம் என்றதும் இளையராஜா போகவில்லை. கோயில் கருவறைக்குள் இளையராஜா என்றில்லை; யாருமே நுழைய முடியாது.” என்று கூறியுள்ளார்.



  • Dec 16, 2024 16:27 IST
    ஜாபர் சாதிக் பணத்தை வெள்ளையாக்க உதவி? தமிழ்நாடு பாடநூல் கழகம் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “போதைப் பொருள் விற்பனை மூலம் ஜாபர் சாதிக்கிற்கு கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் மறைமுக உதவி செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தை பயன்படுத்தியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Dec 16, 2024 16:13 IST
    திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கு ஆபரேஷன் - 2 பேர் கைது 

    திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார் எழுப்பினர். மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஹரிகரன், ஜெயராமன்  ஆகிய இருவரையும் போலீசார்  கைது செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.



  • Dec 16, 2024 16:09 IST
    மாநிலத் திட்டக்குழு தயாரித்த மதிப்பீடு அறிக்கைகள் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

    மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு அறிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இதில் தி.மு.க அரசின் சாதனை திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், எண்ணும் எழுத்தும் ஆகியவை சார்ந்து ஆய்வுகள், மக்கள் கருத்துகள், பயனாளிகள் விவரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • Dec 16, 2024 15:55 IST
    திருமாவளவனுக்கு தி.மு.க அழுத்தம் கொடுக்கவில்லை - எ.வ.வேலு

    நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் வெளியிட்ட எல்லாருக்குமான தலைவர் நூல் வெளியீட்டு விழாவிற்கு செல்ல வேண்டாம் என வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, திருமாவளவனுக்கு தி.மு.க அழுத்தம் கொடுக்கவில்லை; நட்பைத் தாண்டி சகோதர பாசத்துடன் பழகக் கூடியவர் திருமாவளவன்” என்று கூறியுள்ளார்.



  • Dec 16, 2024 15:51 IST
    நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி டி.எஸ்.பி-யிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புகார் 

    நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புகார் அளித்துள்ள்னர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி நடிகர் தீபக் தவறான கருத்து கூறியதாக புகார் அளித்துள்ளனர். தீபக் கருத்தை ஒளிபரப்பியதால் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது வழக்கு பதிட்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Dec 16, 2024 15:09 IST
    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இளையராஜாவுக்கு அனுமதி இல்லை: அறநிலையத்துறை விளக்கம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மரபு, பழக்க வழக்கப்படி அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. ராமானுஜ ஜீயர் உடன் வந்த இசையமைப்பாளர் இளையராஜா, அர்த்த மண்டப வாசல் படி ஏறியபோது அங்கிருந்தே சாமி தரிசனம் செய்யலாம் என ஜீயர் கூறியதை ஒப்புக்கொண்டு அவரும் அங்கிருந்தே தரிசனம் செய்தார். ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்தார்" என்று அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.



  • Dec 16, 2024 14:27 IST
    வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுபெற்று, மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Dec 16, 2024 14:24 IST
    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கன்னியாகுமரிக்கு உள்ளூர் விடுமுறை

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 28-ந் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 16, 2024 14:22 IST
    வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை: இன்ஃபோசிஸ் நிறுவனர்

    "தொழில்முனைவில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை, தொழில்முனைவோர்தான் நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். அதன் மூலம் முதலீடுகளை பெருக்கி வரி செலுத்துகிறார்கள். முதலாளித்துவம் கொள்கையை பின்பற்றும் நாடுகளில் சாலைகள், உட்கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கும், இந்தியா போன்ற ஏழை நாட்டில் முதலாளித்துவம் கொள்கைக்கான அடித்தளம் இல்லை. நாம் தொழில்முனைவில் முன்னேற வேண்டும் என்றால் இக்கொள்கையை தழுவ வேண்டும் என்று, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசியது சர்ச்சையான நிலையில், மீண்டும் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார்



  • Dec 16, 2024 13:28 IST
    மிக கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர். காஞ்சிபுரம், கடலூர். விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 18-ந் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர். அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Dec 16, 2024 13:23 IST
    குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் மரணமடைந்ததாக புகார்: சுகாதாரத்துறை விளக்கம்

    சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, மைக்ரோ பயாலஜி சோதனையில் கிருமி பாதிப்பு இல்லை என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சான்றிதழ்  அளித்துள்ளது. மேலும் இறப்பிற்கான காரணம் தெரிவதற்காக ரசாயன பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காலரா பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் தண்ணீரில் கலக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், மாநகராட்சி தரப்பில் மீண்டும் குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது லாரிகள் மூலமே குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது



  • Dec 16, 2024 12:39 IST
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 2 நாட்களில் வலுப் பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



  • Dec 16, 2024 12:26 IST
    திருமாவுக்கு திமுக அழுத்தம் தரவில்லை - எ.வ.வேலு

    திருமாவளவனுக்கு அழுத்தம் தரவேண்டிய தேவை திமுகவுக்கோ, எனக்கோ இல்லை. நட்பைத் தாண்டி சகோதர பாசத்துடன் பழக கூடியவர் திருமாவளவன் என்று  விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்தார். 



  • Dec 16, 2024 11:49 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல்- ஸ்டாலின் எதிர்ப்பு

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்றுவிடும். பெரும்பான்மை இல்லாத போதும், மசோதாவை கொண்டுவந்து, பிரச்சினைகளை திசைதிருப்ப
    முயற்சி என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 



  • Dec 16, 2024 11:47 IST
    குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு

    சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய செயலர் அதுல்ய மிஸ்ரா உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 



  • Dec 16, 2024 11:00 IST
    திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம்

    நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து விவசாயிகள் எர்ணாகுளம் - காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Dec 16, 2024 10:16 IST
    ஆற்றில் மாயமான சிறுவன் - தேடும் பணி தீவிரம்

    மதுராந்தகம் கிளியாற்றில் மாயமான மாணவனின் உடலை ஆக்சிஜன் சிலிண்டருடன் தேடும் பணியில்  தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • Dec 16, 2024 10:05 IST
    சென்னை திரும்பும் குகேஷ் - அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கார்!

    சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அரசு சார்பில் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரில் அவரது புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.



  • Dec 16, 2024 09:47 IST
    தூத்துக்குடி மில்லர்புரம் சாலையில் தேங்கிய மழைநீர்

    தூத்துக்குடி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Dec 16, 2024 09:28 IST
    தாய்லாந்திற்கு கூடுதல் விமானம்

    தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு இன்று முதல், சென்னையில் இருந்து கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படுகிறது. அதைப்போல் ஹாங்காங்கிற்கு செல்லும் விமானத்தில், கூடுதல் பயணிகள் பயணிக்க வசதியாக, பெரிய ரக விமானம் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், தொழில்துறை பயணிகள் அதிகரிப்பால், சென்னை விமான நிலையத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Dec 16, 2024 09:02 IST
    முருங்கைக்காய் விலை மீண்டும் உயர்வு!

    சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 250க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.50 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் ரூ. 270 வரை விற்பனையாகிறது.



  • Dec 16, 2024 08:56 IST
    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Dec 16, 2024 08:24 IST
    சிறுவனுக்காக பிரார்த்திக்கிறேன்- அல்லு அர்ஜுன்

    புஷ்பா-2 - கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்காக பிரார்த்திக்கிறேன்,
    வழக்கு நடைபெற்று வருவதால் நேரில் சந்திதித்து ஆறுதல் கூற முடியவில்லை என நடிகர் அல்லு அர்ஜுன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Dec 16, 2024 07:45 IST
    "விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராக இருக்கும்" - திருமாவளவன்

     "விசிக எப்போதும் சனாதனத்திற்கு எதிராக இருக்கும்"; எந்த சூழ்நிலையிலும் சனாதன சக்திகள் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



  • Dec 16, 2024 07:41 IST
    வெள்ள பாதிப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவுரை

    நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ விடுமுறை விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



  • Dec 16, 2024 07:40 IST
    மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

     

    மதுரையில் நாயின் காலில் பேருந்தை ஏற்றிய விவகாரத்தில் அரசு பேருந்து  ஓட்டுநர் நமச்சிவாயம் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 



  • Dec 16, 2024 07:38 IST
    புதிய தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல்

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ. 1500 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தி தைவான் நிறுவன தொழிற்சாலைக்கு இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  



  • Dec 16, 2024 07:34 IST
    கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்

    ஸ்ரீ வில்லிப்பூத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்டார். கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்த போது அவர் தடுக்கப்பட்ட நிலையில் அர்த்த மண்டப படியின் அர்கே நின்றவாறே கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment