Advertisment

Tamil News Highlights: சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை மீறி கடலில் பாய்ந்த கார்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்!!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.23 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.81 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

மழை நிலவரம்: நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இரவு ஒரு மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 17, 2024 22:20 IST
    அரையாண்டு தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு

    திண்டுக்கல்லில் ஃபீஞ்சல் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2024 21:51 IST
    சென்னையில் போதை பொருள் விற்ற இருவர் கைது

    சென்னை, தாம்பரம் அருகே போதை பொருள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். ராஜசேகர், மூர்த்தி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.



  • Advertisment
    Advertisement
  • Dec 17, 2024 21:19 IST
    சென்னையில் லேசான மழை

    சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.



  • Dec 17, 2024 21:02 IST
    ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.



  • Dec 17, 2024 20:49 IST
    சாம்சங் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

    சாம்சங் ஊழியர்கள் பிரச்னை தொடர்பாக தொழிலாளர் ஆணையரகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தொழிலாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிர்வாகம் செவி சாய்க்காவிட்டால் 2ம் கட்ட வேலை நிறுத்தம் மேற்கொள்ள ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.



  • Dec 17, 2024 20:28 IST
    அ.தி.முக.வில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

    சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் தலைமையில் 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தனர். 



  • Dec 17, 2024 20:12 IST
    611 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, காவல்துறையினர் வேதாளை தெற்கு தெருவில் உள்ள ராஜா முகமது என்பவரது வீட்டை சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த 611 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜா முகமதுவை போலீசார் கைது செய்தனர். 



  • Dec 17, 2024 20:09 IST
    செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாடமி

    செஸ் விளையாட்டுக்கென ‘Home Of Chess' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Dec 17, 2024 18:54 IST
    நாடாளுமன்ற கூட்டத்துக்கு வராத 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் 

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்தபோது, கொறடா உத்தரவையும் மீறி அவைக்கு வராத 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க எம்.பி.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு பா.ஜ.க முடிவு செய்துள்ளது.



  • Dec 17, 2024 18:36 IST
    காங்கிரஸ் கட்சியால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை:  “2029-க்குப் பின் நாடாளுமன்ற கால அளவை கொண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் நான்கு தேர்தல்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல்தான்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கலைப்பினால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது” என்று கூறினார்.



  • Dec 17, 2024 18:24 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவால் யாருக்கும் பிரச்னை இல்லை - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சில திரித்து சொல்கின்றனர்; அரசியல் தலைவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும்  இந்த மசோதாவால் யாருக்கும் பிரச்னை இல்லை” என்று கூறினார்.



  • Dec 17, 2024 17:28 IST
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 17, 2024 17:25 IST
    அமேசான் நிறுவனத்துக்கு ரூ.44,519 அபராதம் - நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    சரவணகுமார் என்பவர் மொபைல் போன் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு மொபைல் போனுக்கு பதில் தலைமுடி வாசனை திரவியம் அனுப்பியதால் ஏமாற்றப்பட்ட சரவணகுமார் நாமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில், அமேசான் நிறுவனத்துக்கு ரூ.44,519 அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Dec 17, 2024 16:54 IST
    சாத்தூர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.



  • Dec 17, 2024 16:49 IST
    வேலைவாய்ப்பின்மை 3.2% ஆக குறைவு: மக்களவையில் நிர்மலா சீதாராமன் 

    "ஏப்ரல்-அக்டோபர் 2024-25 இல் சில்லறை பணவீக்கம் 4.8 சதவீதமாக இருந்தது. இது கொரோன தொற்றுநோய்க்குப் பிறகு மிகக் குறைவு. 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • Dec 17, 2024 16:39 IST
    குட்கா முறைகேடு வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரி ஜார்ஜ் மனு தள்ளுபடி

    குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை பென் டிரைவில் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



  • Dec 17, 2024 16:23 IST
    நடிகர் எஸ்.வி.சேகர் வழக்கு - தீர்ப்பு ஒத்தி வைப்பு 

    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தைப் பதிவிட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ15,000 அபராதம் விதித்தது 

    எஸ்.வி. சேகரின் கருத்து, ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இது தவறுதலாக நடைபெற்றது என்ற குற்றவாளியின் வாதத்தை ஏற்க முடியாது என காவல்துறை தரப்பு வாததிட்டுள்ளது. 

     



  • Dec 17, 2024 15:57 IST
     17 நாட்களாகியும் வடியாத வெள்ள நீர்

    விழுப்புரத்தில் 17 நாட்களாகியும் சுமார் 4 அடிக்கு மேல் மழை நீருடன் கழிவு நீர் கலந்து காணப்படுகிறது. 
    குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகிறார்கள். 



  • Dec 17, 2024 15:33 IST
    "தி.மு.க.வின் எதிர்ப்பு உறுதியானது" - கனிமொழி எம்.பி பேச்சு 

    "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தி.மு.க-வும், தி.மு.க தலைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், திமுகவின் எதிர்ப்பு உறுதியானது" என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார். 



  • Dec 17, 2024 15:31 IST
    'சி.பி.ஐ விசாரணைக்கு தடையில்லை': சுப்ரீம் கோர்ட்  அதிரடி

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்  அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.  "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" என்றும் கருத்து தெரிவித்துள்ளது. 

     



  • Dec 17, 2024 14:37 IST
    சிறை தண்டனையை எதிர்த்து நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தைப் பதிவிட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து. வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ₹15,000 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், எஸ்.வி. சேகரின் கருத்து, ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இது தவறுதலாக நடைபெற்றது என்ற குற்றவாளியின் வாதத்தை ஏற்க முடியாது என காவல்துறை தரப்பு வாதம்!



  • Dec 17, 2024 14:36 IST
    வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

    பழைய பெருங்களத்தூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது



  • Dec 17, 2024 14:13 IST
    தேவையான பெரும்பான்மை இல்லாதபோது எதற்கு ஆதரவு? எம்பி டி.ஆர்.பாலு கேள்வி

    "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தேவையான பெரும்பான்மை அரசுக்கு இல்லாதபோது எதற்கு இதை அனுமதிக்கிறீர்கள்? என்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்



  • Dec 17, 2024 14:11 IST
    தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    நாளை தமிழகத்தின் சென்னை,  செங்கல்பட்டு,  திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு. நாளை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Dec 17, 2024 14:09 IST
    ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.



  • Dec 17, 2024 13:15 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பு

    "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஜனநாயகம் அரசியல் சாசனம் மற்றும் கூட்டாட்சி தத்துவம் என அனைத்துக்கும் எதிரானது" என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



  • Dec 17, 2024 13:12 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்ப பரிந்துரை

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவின் பரிசீலினையின் போது அனைத்து கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.



  • Dec 17, 2024 12:55 IST
    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு 

    இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி தனது அசைக்க முடியாத ஆதரவை வழங்கியது, இது நாடு முழுவதும் தேர்தல் செயல்முறையை சீராக்கும் என்று கூறியத.

    இதற்கிடையில், ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதா நாட்டில் உள்ள அனைத்து பிராந்திய கட்சிகளையும் ஒரே அடியாக முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், இது "உச்ச தலைவரின் ஈகோவை திருப்திப்படுத்த" மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சாடினார்.



  • Dec 17, 2024 12:39 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை  மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.

    மக்களவையில் சமாஜ்வாதி கட்சி எம்பி தர்மேந்திர யாதவ், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டில் ‘சர்வாதிகாரத்தை’ கொண்டு வர பாஜக முயற்சிப்பதாகக் கூறினார்.

    காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை அறிமுகப்படுத்துவது, பரிசீலிப்பது இந்த அவையின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது, அதை திரும்பப் பெறுமாறு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.



  • Dec 17, 2024 11:56 IST
    அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்

    கனிமவள முறைகேடு புகார் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினார்.  2006ம் அமைச்சராக இருந்த போது சட்டவிரோத சுரங்கங்களுக்கு அனுமதி அளித்தாக புகார் உள்ளது. 



  • Dec 17, 2024 11:38 IST
    இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு

    இரட்டை இலை சின்னம் தொடர்பான மனுவிற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 



  • Dec 17, 2024 11:17 IST
    இ.பி.எஸ்ஸின் பயப் பட்டியல் பெரியது: கே.என்.நேரு கடும் தாக்கு 

    பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றால் பயம். இ.டி, சிபிஐ, ஐடி என்றால் பயம். தெனாலியின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது. பழனிசாமியின் பயப் பட்டியலும் எல்லாம்  பயம் மயம் என சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது என அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்தார். 



  • Dec 17, 2024 10:37 IST
    ராமேஸ்வரம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி

    காற்றின் வேகம் குறைந்ததால் ராமேஸ்வரம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி மீனவர்கள் கடலுக்கு செல்ல மீனவளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். 



  • Dec 17, 2024 10:31 IST
    சடங்கால் நேர்ந்த விபரீதம்

    சத்தீஸ்கரில் குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். குழந்தைக்காக உள்ளூர் சடங்குகளை நம்பி கோழிக்குஞ்சை விழுங்கியதால் விபரீதமானது. 



  • Dec 17, 2024 10:07 IST
    இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு

    தென்மேற்கு வங்கக் கடலுக்கு காற்றழுத் தாழ்வுப் பகுதி வந்தடைந்தது. காற்றழுத்த தாழ்வுப் பக்தி வலுவடைந்து தமிழகத்தை நோக்கி 2 நாட்களில் நகரும். தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 17, 2024 09:48 IST
    கேரள இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு

    கேரளா, கண்ணூரில் வயநாட்டை சேர்ந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



  • Dec 17, 2024 09:46 IST
    தப்பிச் செல்ல நினைத்ததில்லை - ஆசாத்

    சிரியாவிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்ல நினைக்கவில்லை என ஆட்சியை இழந்த அதிபர் ஆசாத் திட்டவட்டம். டமாஸ்கஸில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால், ரஷ்ய படைகள் தங்களை மாஸ்கோ அழைத்து சென்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 17, 2024 09:43 IST
    காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது

    தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. தமிழகத்தை நோக்கி 2 நாட்களில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 17, 2024 09:37 IST
    சென்னையில் வருமான வரித்துறை சோதனை

    சென்னையில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த 7 பேர் கொண்ட குழு போரூரில் உள்ள கெப்பல் தனியார் ஐடி வளாகத்தில் சோதனை. 12.6 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கெப்பல் நிறுவனம் போரூரில் உள்ள ஒன் பாராமவுண்ட் ஐடி வளாகத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய நிலையில், கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு.



  • Dec 17, 2024 09:18 IST
    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    தென்காசி, குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீடிப்பதன் காரணமாக, ஐந்தருவி மற்றும் புலி அருவிகளில்  சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  



  • Dec 17, 2024 09:16 IST
    இளையராஜா கோயில் சென்ற விவகாரம்

    "இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவமதித்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



  • Dec 17, 2024 09:01 IST
    மீண்டும் வேகமெடுக்கும் அமராவதி தலைநகர் திட்டம்

    ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்ட பணிகளுக்காக ரூ. 24,000 கோடி ஒதுக்கீடு செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய சட்டப்பேரவை கட்டடம், நீதிமன்ற வளாகம், நிர்வாகத்துறை கட்டடம் உள்ளிட்டவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Dec 17, 2024 08:54 IST
    இலங்கை - இந்திய கடற்படை கூட்டு பயிற்சி

    இந்தியா - இலங்கை கடற்படைகள் இன்று முதல் 4 நாட்கள் விசாகப்பட்டினத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் இலங்கை படையுடன் இந்திய படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும் என மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



  • Dec 17, 2024 08:50 IST
    சபரிமலையில் பக்தர் தற்கொலை முயற்சி

    கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் திடீரென கோயில் வளாக மேற்கூரை மேல் நின்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். கீழே குதித்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Dec 17, 2024 08:45 IST
    காங்கிரஸூக்கு திரிணாமூல் கேள்வி

    பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு எப்படி ஹேக் செய்ய முடியும் என காட்டுங்கள். மின்னணு வாக்கு எந்திரங்கள் விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி காங்கிரஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.



  • Dec 17, 2024 08:19 IST
    அவசர ஆலோசனை கூட்டம்

    காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் அவசர ஆலோசனை கூட்டம் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்.



  • Dec 17, 2024 08:16 IST
    சுனாமி எச்சரிக்கை

    பசுபிக் கடலில் வனுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • Dec 17, 2024 07:40 IST
    ஜார்ஜியாவில் 12 இந்தியர்கள் உயிரிழப்பு

    ஜார்ஜியா நாட்டின் காக்கஸஸ் மண்டலத்தில் பனிப்பிரதேச விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் விஷவாயு  தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் தடைப்பட்டதால் ஜெனரேட்டரை பயன்படுத்தியபோது அதில் இருந்து வெளியேறிய கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 17, 2024 07:34 IST
    இலங்கை அரசு உறுதி

    இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமரி திசநாயக உறுதி அளித்துள்ளார்.



  • Dec 17, 2024 07:32 IST
    கணினி வழித் தேர்வு ரத்து 

    அரசு உதவி வழக்கறிஞர் பணியிடத்துக்கு நடைபெற்ற கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஒளிக்குறி உணரி முறையில் 2025 பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்தப்படும் என டிஎன்பிஎஸி அறிவித்துள்ளது.



Tamil News Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment