திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, கூட்டணி கட்சி தலைவர்கள் கைதாகி விடுதலை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் திடீர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக சார்பில் திடீர் போராட்டம் நடத்திய திமுகவினர் கைதாகி விடுதலையானார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்பட பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாகி வருகிறது. திமுக சார்பில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 5ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே வந்து அமர்ந்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசன், திருவமாவளவன் உள்பட முக்கிய தலைவர்களும் வந்தனர். அவர்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்தனர்.

அப்போது தொண்டர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘நம்முடைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். காவல் துறையினர் நம்மை கைது செய்து மாலையில் விடுவித்தாலும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இந்த போராட்டத்தின் LIVE UPDATE:

பகல் 1.50 மணி : கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், கீ.வீரமணி, முத்தரசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

பகல் 1.40 மணி : தஞ்சாவூர், கோவையிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பகல் 1.35 மணி : புதுவையில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பகல் 1.30 மணி : நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை ஆர்.கே.வி. மாளிகையில் கனிமொழியை போலீசார் சிறை வைத்துள்ளனர்.

kanimozhi agitation

நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி

பகல் 1.10 மணி : திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். ஸ்டாலின் மற்றும் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், நெல்லை சந்திப்பு எதிரில் உள்ள அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், சிவபத்பநாபன், வகாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பகல் 1.05 மணி : தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஏராளமான தொண்டர்கள் வள்ளுவர் கோட்டம் வந்த வண்ணம் உள்ளனர்.

பகல் 1 மணி : வள்ளுவர் கோட்டம் விரைந்த போலீஸ் அதிகாரிகள் திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை கைது செய்தனர். மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன்,கீ.வீரமணி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.

12.45 மணி : இந்த தகவல் பரவியதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

×Close
×Close