தமிழ்நாடு சட்டமன்றம் கவர்னர் உரை : ஜெயலலிதா வழியில் அரசு செயல்படுவதாக ஆளுனர் பாராட்டு

தமிழ்நாடு சட்டமன்றம் கவர்னர் உரைக்காக கூடியது. வழக்கமான மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல் கவர்னர் உரை மட்டுமே!

Tamilnadu News live updates
Tamilnadu News live updates

தமிழ்நாடு சட்டமன்றம் கவர்னர் உரைக்காக கூடியது. வழக்கமான மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல் கவர்னர் உரை மட்டுமே!

தமிழ்நாடு சட்டமன்றம் கவர்னர் உரைக்காக இன்று (ஜனவரி 8) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், மரபுப்படி முதல் நாளில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உரை மட்டுமே சபை அலுவலில் இடம் பெற்றது.

தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் ஆகியவையே கவர்னர் உரையின் அம்சங்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவர் சட்டமன்றம் வந்து உரை நிகழ்த்தவிருப்பதால் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளில் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக ஜெயித்து முதல் முறையாக சட்டமன்றம் வந்திருப்பதும் இந்தக் கூட்டத் தொடரின் முக்கிய அம்சம். இன்றைய (ஜனவரி 8) கூட்டத்தின் LIVE UPDATES

காலை 10.55 : கவர்னர் உரையுடன் இன்றைய சட்டமன்ற அலுவல் முடிந்தது. இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து பிற்பகலில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு எடுக்கும்.

காலை 10.50 : மொத்தம் 50 நிமிடங்கள் உரையை வாசித்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கடைசியாக, ‘வணக்கம், பொங்கல் வாழ்த்துகள்’ என கூறி முடித்தார்.

காலை 10.45 : ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24 தேதி தொடங்கப்பட இருக்கும் ஸ்கூட்டர் திட்டத்தில் அரசின் பங்கு 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் – ஆளுனர்

காலை 10.40 : ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்: ஆளுனர்

காலை 10.35 : சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது- ஆளுனர்

காலை 10.30 : ஜி.எஸ்.டி. வரிமுறையை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்கும், நிதிச்சுமை இருப்பினும் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கும் தமிழக அரசுக்கு ஆளுனர் பாராட்டுகளை தெரிவித்தார்.

காலை 10.25 : சமூக நலத் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது – ஆளுனர்

லை 10.20 : ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் தமிழக அரசு வழுவாது செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது :  பேரவையில் ஆளுநர் பாராட்டு

காலை 10.17 : வெளிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இந்திய தேர்தல் ஆணையம் இந்த ஆட்சிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறது. இந்தச் சூழலில் இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததை பற்றி கவலைப்படாமல் இந்த ஆட்சி தயாரித்த உரையை வாசிப்பது முறையல்ல.

தவிர, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுனர் மாநிலம் முழுவதும் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதை கண்டிக்க முடியாமல் இந்த அரசு கைகட்டி, வாய் பொத்தி நிற்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேச இந்த அரசு தயாராக இல்லை. இதையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்’ என கூறினார்.

Governor at Tamilnadu Assembly, DMK opposed
மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்து வெளியே வந்தபோது…

காலை 10.05 : கவர்னரின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது நேரம் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் பின்னர் சபையை புறக்கணித்து வெளியேறினர்.

காலை 10.01 : கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேச்சை ஆரம்பித்தார். ‘ஹானரபிள் மெம்பர்ஸ்’ என ஆரம்பித்து, பிறகு ‘வணக்கம்’ என தமிழில் குறிப்பிட்டார் கவர்னர். அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘உட்காரங்க, உட்காரங்க.. யூ ஷேல் ரெய்ஸ் யுவர்ஸ் ஒப்பீனியர் ஆன் டிபேட்ஸ்’ என கவர்னர் கூறினார்.

காலை 10.00 : தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை தொடங்கியது.

காலை 9.55 : தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சட்டமன்ற வளாகம் வந்தார். அவரை சபாநாயகர் தனபால், சட்டமன்ற செயலாளர் பூபதி ஆகியோர் வரவேற்றனர்.

காலை 9.45 : ஆர்.கே.நகரில் ஜெயித்து முதல் முறையாக சட்டமன்றம் வந்த டிடிவி தினகரனுக்கு அவரது அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் வரவேற்பு கொடுத்தனர். வழக்கம்போல சிரித்துக்கொண்டே சட்டமன்றம் வந்தார் தினகரன்

Governor at Tamilnadu Assembly, DMK opposed
டிடிவி தினகரன், சட்டமன்றம் வந்தபோது…

காலை 9.30 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரிசையாக வந்தபடி இருந்தனர்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Live updates governor at tamilnadu assembly dmk opposed

Next Story
ரஜினியின் முத்திரையால் குழப்பம்: மும்பை நிறுவனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com