/indian-express-tamil/media/media_files/nYS6tEb1EjO19tL2RGdF.jpg)
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
LK Advani | PM Modi: பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது.
அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை மந்திரியாகவும், தகவல் தொடர்பு துறை மந்திரியாகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். அவரது நாடாளுமன்றத் தலையீடுகள் எப்பொழுதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை." என்று பதிவிட்டுள்ளார்.
Advani Ji’s decades-long service in public life has been marked by an unwavering commitment to transparency and integrity, setting an exemplary standard in political ethics. He has made unparalleled efforts towards furthering national unity and cultural resurgence. The conferring…
— Narendra Modi (@narendramodi) February 3, 2024
ஆங்கிலத்தில் படிக்கவும்: LK Advani to be conferred with Bharat Ratna, announces PM Modi
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.