போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்காத வண்ணம் அவர்களிடமிருந்து அபராதத்தை பெறும் பொருட்டு சென்னை போலீஸ் பெரும்படையுடன் களமிறங்கி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் இ-சலான் மிஷின் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 200 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாருக்கு 350 இ-சலான் மிஷின்கள் வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், போக்குவரத்து போலீசார் மட்டுமல்லாது, சட்டம் – ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐ.களுக்கும், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாருக்கு 35 இ-சலான் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் – ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐகளுக்கென கூடுதலாக 350 இ-சலான் மெஷின்கள் வழங்கப்பட உள்ளதாக சென்னை போலீஸ் கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Lo officers can also levy spot fines on motorists