Advertisment

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிச. 27, 30-ல் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Local body election date : தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today Live updates

Tamil Nadu News today Live updates

தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிச.,13 ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி தேர்தல் தேதியை வெளியிட்டார்.

தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது.

4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள்

கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறம்.

கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறம்,

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலான வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் அட்டவணை விபரம்

வேட்புமனு தாக்கல் : டிச.,6

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : டிச.,13

மனுக்கள் பரிசீலனை : டிச.,16

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : டிச.,18

முதல் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,27

2 ம் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,30

ஓட்டு எண்ணிக்கை : ஜன., 2

தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் : ஜன.,4

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு : ஜன.,6

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் : ஜன.,11

'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி

Tamil Nadu Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment