Local body election updates : தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் சதவீதம் வாரியாக (மொத்த எண்ணிக்கை : 515 ) திமுக 42.14, அதிமுக 36.31 பெற்றுள்ளன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (மொத்த எண்ணிக்கை : 5090 ) சதவீதம் வாரியாக திமுக 39.31, அதிமுக 32.77 சதவீதம் பெற்றுள்ளன.
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில் அ.தி.மு.க.2,136 இடங்களிலும் தி.மு.க. 2,356 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன . மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில், திமுக 247 இடங்களிலும் அதிமுக 213 இடங்களிலும் முன்னிலை வகித்தன.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டது.
Live Blog
Local body election in Tamil, Latest News in Local body election Updates : ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் இங்கே காணலாம்.
லேட்டஸ்ட் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிலவரம்:
27 மாவட்டங்களில் மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5090
கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
திமுக - 2099
அதிமுக - 1781
காங்கிரஸ் - 132
பாஜக - 85
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 62
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 33
தேமுதிக - 99
மற்றவை - 795
லேட்டஸ்ட் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிலவரம்:
27 மாவட்டங்களில் மொத்த மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 515
கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை
திமுக - 243
அதிமுக - 214
காங்கிரஸ் - 15
பாஜக -7
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 7
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
தேமுதிக - 3
மற்றவை - 22
27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள்மாவட்ட ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சதவீதம்:
திமுக - 47.18%
அதிமுக - 41.55%
காங்கிரஸ் - 2.91.%
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1.36%
பாஜக - 1.36%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 0.39%
மற்றவை - 4.27%
இதில் பாமக, தேமுதிக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என்பதால் அதன் சதவீதம் குறிப்பிடப் படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கை கீழ்வருமாறு,
திமுக - 2089
அதிமுக- 1762
மற்றவை - 794
காங்கிரஸ் - 131
தேமுதிக - 97
பாஜக - 84
சி.பி.ஐ - 62
சி.பி.ஐ(எம்) -33
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றார். முன்னதாக, நகர்ப்புற அமைப்புகளை தவிர்த்துவிட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி அறிவிக்கபப்ட்டார். இவரது வெற்றியை எதிர்த்து தேவி என்கிற வேட்பாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில் , வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் ஆறாம் தேதி பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 1.12.2020 முதல் இன்று வரை 712 புகார் மனுக்களும், தொலைபேசி மூலம் 1,082 புகார்கள் வந்துள்ளது தேர்தல் ஆணையர் தெரவித்தார். மேலும், இந்த புகார்கள்அனைத்தும் ஆணையத்தால் நிவர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
30,358 காவல் துறையினரை தமிழக தேர்தல் ஆணையம் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தியது. வாக்கு எண்ணும் பணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3000 முதல் 5,500 வரையிலான பணியாளர்கள் வீதம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட ஒரு இந்திய ஆட்சி பணி அலுவலர் தேர்தல் பார்வையாளராக பணியாற்றினார் என்றும் குறிப்பிட்டார்.
வேட்பாளர் இறப்பு காரணமாக திருச்சிராப்பள்ளி மாவாட்டம் மணப்பாறை ஊர்ராட்சி ஒன்றியம் கே.பெரியப்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண்.2, திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி கிராம ஊராட்சி வார்டு எண் 1 , திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் சென்னகரம் கிராம ஊராட்சி வார்டு எண் 1, ஆகியவற்றில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்துவிட்டதால் தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப் பட்டதாவும் தெரிவித்தார்.
இம்மாத இறுதிக்குள் வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போடியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடுத்த ஒன்றையரை ஆண்டுகள் இந்த வேட்பாளார்கள் களப்பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் தமிழக சட்டசபை தேர்தலில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விழுக்காடு அதிகரித்து இருப்பதாக கூறிய சீமான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜாதியை தாண்டி பல இடங்களில் (ஒன்றிய வார்டு உறுப்பினர் ) நாம் தமிழர் வென்றுள்ளது என்றும் குறிபிட்டார்.
திமுக சார்பில் போட்டியிட்ட கவிதா என்ற 25 வயது பொறியியல் பட்டதாரி ஊரட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட திருவிழிமிழலை ஊராட்சியில் 148 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இதற்கு முக்கிய கரணம், பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இச்சட்டம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பதவி காலத்தில் இயற்றப்பட்டதாகும்.
ஆந்திரா,அசாம்,பீகார்,சத்தீஸ்கர்,குஜராத்,இமாச்சலப் பிரதேசம்,ஜார்கண்ட்,கர்நாடக, கேரளா,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா,பஞ்சாப்,ராஜஸ்தான்,சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் பஞ்சாயத் ராஜ் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயலட்சுமி என்பவரை விட சுமார் ஆயிரத்து 200 வாக்குகள் கூடுதல் பெற்றிருக்கிறார். இருந்தாலும், தவறுதலாக விஜயலட்சுமிக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஜெயலட்சுமி ஆதரவாளர்கள் 3 மணி நேரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டனர். விஷயம் தேர்தல் ஆணையத்துக்கு கொண்டுசெள்ளப்பட்டாதால், உரிய நடவடிக்கை எனப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது
கேத்துவார்பட்டி 2 வார்டு மக்களுக்கு உறுப்பினர் பதவிக்கு கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட முருகேசன் தோல்வி அடைந்தார். இருந்தும், சிறிதும் மனம் தளராமல், வார்டு மக்களுக்கு தன்னை தோற்கடித்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
கேத்துவார்பட்டி 2 வார்டு மக்களுக்கு நன்றி : இப்படிக்கு நீங்க இப்படி செயவீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்ககல.....
50,000 வாக்குகளுக்கு ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று வரையறை செய்யப்பட்டு போட்டியிடுகின்றனர். ஒரு மாவட்டத்தில் வெற்றி பெறுகிற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சி அமைப்புக்கு அந்த மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்குகிறது.
27 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 515 என்ற கணக்கில் உள்ளது.
இதனையும் நினைவில் கொள்ளவும் : 5,000 வாக்குகளுக்கு ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் (Chairman) தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்கள் ஒன்றிய அளவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
27 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 5090 என்ற கணக்கில் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக வெற்றி தடம் பதித்திருந்தாலும் (உதரணமாக கன்னியாகுமரி திமுக - 0), திமுக சில மாவட்டங்களில் அதிகமான ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளது . உதரணமாக திருவண்ணமலையில், திமுக 21 ( அதிமுக -8), தஞ்சாவூரில் திமுக 21 (அதிமுக - 6)
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி , மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுக 36.31 சதவீதத்தை பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக ஓரளவு வெற்றியடைந்திருந்தாலும், திமுக போன்று அதிகப்படியான எண்ணிகையை பிடிக்கவில்லை.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி , மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுக 42.14 சதவீதத்தை பெற்றுள்ளது.
27 மாவட்டங்களின் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுக வெற்றி நிலவரம்:
கன்னியாகுமாரி,விருதுநகர், அரியலூர், ஈரோடு, தேனீ திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுக பின்னடவை சந்தித்துள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை, எதிர்மறைக்கூறுகளை மீறி திமுக கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights