TN local body polls Tamil News: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று பரவல் அச்சத்திற்கு மத்தியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. மேலும், தேர்தலில் போட்டியிடும் தமிழகத்தின் பிரதரான கட்சிகளான திமுக, அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதில், அதிமுக – பாஜக இடையே நடைபெற்று வந்த கூட்டணி பேச்சுவார்த்தையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, நடிகர் விஜய்-யின் 'விஜய் மக்கள் இயக்கம்' உறுப்பினர்களும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குகிறார்கள். இதனால், தேர்தல் களமும், சமூக வலைதள பக்கங்களும் சூடு பிடித்துள்ளன.
நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்களை பறக்க விட துவங்கியுள்ளனர். சில மீம்கள் உள்ளாட்சி தேர்தலையும், சில மீம்கள் கட்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. மேலும், இந்த மீம்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
அவற்றில் சில மீம்கள் இங்கே….
TN people think, appa intha sambavamthuku thada wait pannom.#ADMK #BJPChasingNota pic.twitter.com/Xrv322uVg7
— Anu (@anu_sud) January 31, 2022
TN wants know BJP votes 😂#ADMK #BJPTamilnadu#Annamalai pic.twitter.com/2QqiDpbUBX
— Saimanraj❤ (@Saimanrajs) January 31, 2022
Both ADMK and BJP cadres now (happy inside 😆😆) #LocalBodyElection pic.twitter.com/0chhSuzyzq
— Indian Stock 🇮🇳 (@techieeboi) January 31, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.