உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிரொலி : சாட்டையை சுழற்றுகிறது திமுக
DMK review local body election results : உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DMK review local body election results : உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
Advertisment
Advertisements
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நாளை ( ஜனவரி 6ம் தேதி) துவங்க உள்ளது. இந்த தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக, பல இடங்களில் இந்த கூட்டணி, அதிமுகவிடம் தனது இடங்களை பறிகொடுத்துள்ளது. இந்த செயல் திமுக தலைவர் ஸ்டாலினை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாகவும், கட்சி மற்றும் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடாத நிர்வாகிகள் மீது சட்டசபை கூட்டத்தொடருக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2016 சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத அதிமுக, அதுவும் விளவங்கோடு தொகுதியில் டெபாசிட் இழந்திருந்தது. ஆனால், இந்த உள்ளாட்சி தேர்தலிலோ, 4 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களையும், 16 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் இடங்களையும் வென்றுள்ளது. அதன் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, 2 மாவட்ட பஞ்சாயத்து இடங்களையும்ல 31 பஞ்சாயத்து யூனியன் இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் இடையே இடபங்கீடு விவகாரத்தில் சிறிது சலசலப்பு நிலவிவந்தது உண்மை தான். காங்கிரஸ் கட்சி, 5 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது. திமுக, 21 பஞ்சாயத்து யூனியன் இடங்களையும், காங்கிரஸ் 24 பஞ்சாயத்து யூனியன் இடங்களை வென்றுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட காரணங்களால், ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் இருந்த தூத்துக்குடி மக்களின் மனநிலை, இந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் கண்டுள்ளது, இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி இங்கு வெற்றி பெற்றுள்ள போதிலும், முக்கிய எதிர்க்கட்சியான திமுக, இந்த உள்ளாட்சி தேர்தலில், 17 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் இடங்களில் 61 இடங்களை திமுக வென்றிருந்த நிலையில், அதிமுக 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீனவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தூத்துக்குடி பகுதியில், திமுக சரிவை சந்தித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது.
கன்னியாகுமரியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு திமுக - காங்கிரஸ் இடையே நிலவிய இடபங்கீடு காரணமாக சொல்லப்பட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த பிரச்னையே எழவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆராயப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சிதான். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில், அதிமுகவின் திட்டங்களால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.