scorecardresearch

மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுவேன் : சொல்கிறார் தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர்

Local body election results : கிருஷ்ணகிரி காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக, கல்லூரி மாணவி ஜெ.சந்தியா ராணி (21) வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.

tamil nadu election results, local body election result, tamil nadu local body election result, krishnagiri, sandhya rani, young panchayat president, local body election, tn local body election result, tamil nadu election commission
tamil nadu election results, local body election result, tamil nadu local body election result, krishnagiri, sandhya rani, young panchayat president, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, election in tamilnadu 2019 december, Local Body Elections, Panchayat President, உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், கிருஷ்ணகிரி, சந்தியா ராணி, ஊராட்சி தலைவர், இளம் தலைவர்

கிருஷ்ணகிரி காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக, கல்லூரி மாணவி ஜெ.சந்தியா ராணி (21) வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்.

காட்டிநாயக்கன்தொட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசாரதி. இந்தமுறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், இந்த ஊராட்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெயசாரதி, தனது மகள் சந்தியா ராணியை தேர்தல் களத்தில் வேட்பாளராக களமிறக்கினார்.

சந்தியா ராணி, கா்நாக மாநிலத்துக்குட்பட்ட மாலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
உள்ளாட்சி தேர்தலில், சந்தியா ராணிக்கும், அனிதா என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது. சந்தியா ராணிக்கு 1056 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அனிதாவுக்கு 948 வாக்குகளும் கிடைத்தன . வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சந்தியா ராணி 108 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விவசாயிக்கு அடித்தது லக் : சொந்த ஊரிலும், மாமியார் ஊரிலும் மனைவிமார்களே ஊராட்சி தலைவர்கள்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வெற்றியாளர்களை தெரிந்துகொள்வது மிகச்சுலபம் : வழிமுறை இதோ…

இந்த வெற்றியின் மூலம், தமிழகத்தின் இளம் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெருமையை, சந்தியா ராணி பெற்றுள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தியா ராணி கூறியதாவது, இந்த ஆண்டுடன் எனது படிப்பு நிறைவுபெறுகிறது. எங்கள் ஊராட்சியில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிகமாக செய்ய வேண்டியுள்ளது. அதில் முழுமையான கவனத்தை செலுத்தி, மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுவேன் என்று அவர் கூறினார்..

மக்களே, தெரிஞ்சு வச்சுக்கோங்க. இனிமே நிறைய போட்டித்தேர்வுகள்லயும், மற்ற தேர்வுகள்லயும் கேட்பாங்க…மறந்துறாதீங்க…

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Local body election results ready to serve to people state young panchayat president

Best of Express