உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : வெற்றிக்கணக்கை துவக்கியது நாம் தமிழர் கட்சி

Local body election results : கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாம் தமிழர் கட்சி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

By: Updated: January 3, 2020, 04:32:46 PM

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாம் தமிழர் கட்சி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. . மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தேர்தலில் திமுக அதிமுக இடையில்தான் தீவிரமாக போட்டி நிலவி வருகிறது. . அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது. அங்கு 11வது வார்டில், நாம் தமிழர் கட்சி சார்பில், விவசாயி சின்னத்தில், போட்டியிட்ட, நெ.சுனில், என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்வாகியுள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், உள்ளாட்சி தேர்தலில், நாம் தமிழர் கட்சி முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது. இதேபோல் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதனால், மேலும் பல இடங்களில் அக்கட்சி வெல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Local body election results seemans naam tamilar katchi registers their first victory

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X