ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
By: WebDesk
Updated: January 13, 2020, 11:45:57 PM
DMK Tnpsc Tamil Nadu high Court
ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு நேற்று முன்தினம் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் சில இடங்களில் தேர்தல் நடைமுறை நடந்து கொண்டிருக்கும் போதே தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்ப்பட்டதை எதிர்த்து திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் முறையீடு செய்தார்.
அதை ஏற்ற நீதிபதி, சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரி திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.