31 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர்களுக்கான இடஒதுக்கீடு! புதிய மாவட்டங்களின் நிலை என்ன?

கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்கள் குறித்த அப்டேட் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Local body elections panchayat chairman reservation details announced : தமிழகத்தில் இருக்கும் 31 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர், ஆதிதிராவிட பெண்கள், அதீதிராவிட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவினர் என பட்டியில் இடப்பட்டு தொகுதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர்

பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான நீலகிரி தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட பெண்களுக்கான தொகுதிகள்

நாமக்கல் , திருப்பூர், விருதுநகர் திருநெல்வேலி மாவட்டங்கள் ஆதிதிராவிட பெண்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஆதிதிராவிட சமூகத்தினருக்கான மாவட்டங்கள்

தஞ்சை, அரியலூர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு பெண்களுக்கான மாவட்டங்கள்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் பொதுப்பிரிவு பெண்கள் போட்டியிடுவதற்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவுனருக்கான தொகுதிகள்

திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பொதுப்பிரிவினர்களுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ”நாடாளுமன்ற தேர்தலே ஒரே நாளில் நடக்கிறது” – உள்ளாட்சி தேர்தல் குறித்து தலைவர்களின் கருத்து என்ன?

சமீபத்தில் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் புதிதாக இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் வார்ட்கள் கூட பிரிக்கப்படாத நிலையில் எப்படி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close