தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் கவர்ச்சி மிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் வலுவான எதிர்க்கட்சியாக நிரூபித்த அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தென்காசியில் மதிமுக அளவுக்கே வெற்றி பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலியைப் போலவே, திமுக தலைமையிலான கூட்டணி தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கவுன்சில் மற்றும் அனைத்து 10 ஒன்றிய கவுன்சில்களையும் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
மாவட்ட ஊராட்சி மன்றத்தில் உள்ள 14 இடங்களும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 10 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களையும், மீதமுள்ள ஒரு இடத்தை திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான மதிமுக வெற்றி பெற்றுள்ளது.
மாவட்டத்தின் 10 ஒன்றிய கவுன்சில்களில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 144 இடங்களில் 120-ல் வெற்றி பெற்றுள்ளன - திமுக - 95, காங்கிரஸ் - 12 மற்றும் ம.தி.மு.க - 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அதிமுக 13 இடங்களில் மட்டுமெ வெற்றி பெற்றுள்ளன.
ஆலங்குளம், மேல்நீலிதநல்லூர், செங்கோட்டை, தென்காசி மற்றும் குருவிகுளம் ஒன்றிய கவுன்சில்களில் ஒரு கவுன்சிலர் இடத்தைக் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ வி.எம். ராஜலட்சுமிக்கு 2021 வரை அமைச்சர் பதவி வழங்கியது. ஆனால், இப்போது 17 உறுப்பினர்களைக் கொண்ட சங்கரன்கோவில் ஒன்றிய கவுன்சிலில் ஒரு உறுப்பினரை மட்டுமே பெற்றுள்ளது.
அதே போல, 12 உறுப்பினர்களைக் கொண்ட கடையநல்லூர் ஒன்றியத்தில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், இந்த சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன் குட்டியப்பா என்ற அதிமுகவின் கிருஷ்ணா முரளி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் பால் மனோஜ் பாண்டியனை வெற்றி பெற வைத்த ஆலங்குளம் வாக்காளர்கள் அனைத்து 23 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளையும் திமுகவுக்கு 16, காங்கிரஸ் 3 மற்றும் சுயேட்சைகளுக்கு 4 இடங்களிலும் வெற்றி பெற வைத்துள்ளனர்.
திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக குருவிக்குளம் ஒன்றியத்தின் 17 வார்டுகளில் 8 வார்டுகளை கட்சி பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ளது. அதனால், குருவிக்குளம் ஒன்றிய கவுன்சிலுக்கு மதிமுக தலைமை தாங்க வாய்ப்புள்ளது. இதற்கு திமுக 6 கவுன்சிலர்களின் ஆதரவு அளிப்பதற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட கவுன்சிலின் 9 வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் நிர்வாகி சாக்ரடீஸை தலைவராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் கவர்ச்சி மிக்க தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக நிரூபித்தது.
ஆனால், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தென்காசி மாவட்டத்தில் மதிமுக அளவுக்கே வெற்றி பெற்றுள்ளது என்பது பரிதாபகரமான வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"