உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தத் தடை
Local body election 2019 tamil nadu latest news: புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
Local body election 2019 tamil nadu latest news: புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
Local Body Elections In Tamil Nadu: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் வாக்காளர்கள் என்கிற அடிப்படையில் 5 பேர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று (5-ம் தேதி) 11 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
Advertisment
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதியான இன்று தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Local body election 2019 tamil nadu latest news: திமுக தரப்பில் புதிய மனு
Advertisment
Advertisements
இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக கூறியுள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் வாக்காளர்கள் என்கிற அடிப்படையில் 5 பேர் தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று (5-ம் தேதி) 11 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ‘உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார்’ என கூறப்பட்டது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், ‘2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை.
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும்’ என மாநில தேர்தல் ஆணையம் தனது வாதத்தை முன்வைத்தது.
புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடிக்காவிட்டால் குழப்பம் ஏற்படாதா?- நீதிபதிகள்
‘மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே புதிதாக வார்டு மறுவரையறை செய்த பின்புதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா?’ என மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டன. 2021ல் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே மறுவரையறை செய்யப்படும்’ என பதில் தெரிவிக்கப்பட்டது. திமுக தரப்பில் அபிஷேக்மனு சிங்வி தொடர்ந்து வாதிட்டார்.
9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கலாம்- தமிழக அரசு
'அவசரமாக இப்போது ஏன் மாவட்டங்களை பிரிக்க வேண்டும். தேவைப்பட்டால் எங்களால் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பில், ‘9 மாவட்டங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் ஏன் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்? வேண்டுமானால் அந்த 9 மாவட்டங்களில் தள்ளி வைக்கலாம்’ என வாதிடப்பட்டது.
நீதிபதிகள் கூறுகையில், ‘குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது. நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும்’ என குறிப்பிட்டனர்.
9 மாவட்டங்களில் தேர்தல் தள்ளி வைப்பா?
9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்பது குறித்து பிற்பகல் 2 மணிக்கு பதில் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். திமுக தரப்பில், ‘தொகுதி மறுவரையறை முடித்து, மொத்தமாக தேர்தல் நடத்த வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.
9 மாவட்டங்களைத் தவிர்த்து தேர்தல் நடத்தலாம், உச்ச நீதிமன்றம் கருத்து, வழக்கு தேதிக் குறிப்பிடமால் வழக்கு ஒத்திவைப்பு:
உள்ளசித் தேர்தலை அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்று திமுக மனுவின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்துள்ளது. மேலும், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
இவ்வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளியானது. அப்போது புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த 9 மாவட்டங்களிலும் வார்டுகளை மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.