உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவுக்கு எதிராக திரும்பும் பாஜக… கள்ளக்குறிச்சியில் தனித்து போட்டி

Tamilnadu News Update : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.

Tamilnadu Localbody Election : தமிழத்தில் விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளகளுக்கு எதிராக பாஜக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இதில் 3 கட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளாடசி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே பாமக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திப்பதாக கூறியது.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை எதிர்த்து பாஜக தங்களது வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது.   19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில், 17 ல் அ.தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்தியது. இதேபோல் அதிமுக போட்டியிடும்180 யூனியன் கவுன்சிலர் இடங்களில், 35 இடங்களில் அ.தி.மு.க -வை எதிர்த்து பாஜக தங்களது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் எம்.பாலசுந்தரம் கூறுகையில்,

ஒரு சில இடங்களில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியது உண்மைதான். பாஜக தலைமையிலான அரசின் செயல்பாடுகளும், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பல நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மாநிலத்தில் அடிமட்டத்திலிருந்து கட்சியை வளர்க்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம், என்று கூறியுள்ளார்.

ஆனால் உள்ளூர் பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை ஏற்றுக்கொண்டது. ஆனால் பின்னர் அவர்கள் வேறுவிதமாக முடிவு செய்து வேட்பாளர்களை களமிறங்க உள்ளனர். ஆனால் எங்கள் கட்சி கிராமப்புறங்களில் வலுவான முன்னிலையில் உள்ளது. மேலும் ஆட்சி அதிகாரத்தை ஆளும் திமுக தவறாக பயன்படுத்தினாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஆர் குமரகுரு தெரிவித்துள்ளார்

ஆனால் இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், திமுக கூட்டணியில் மோதல்கள் மற்றும் தாக்குதல்களைப் போல் இல்லாமல், கூட்டணியில் சீட் பகிர்வு சுமூகமாக இருக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தினார். மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது உள்ளாட்சித் தேர்தலில் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை கடினமானது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Localbody election bjp field candidates against aiadmk in kallakurichi

Next Story
கலைஞரின் கனவு இதழ் வெளியீட்டு விழாவில் கனிமொழிக்கு அழைப்பு இல்லையா? திமுகவில் சலசலப்புKanimozhi not invited to The Rising Sun magazine release function, dmk, kanimozhi mp, கலைஞரின் கனவு இதழ் தி ரைசிங் சன் வெளியீட்டு விழா, கனிமொழிக்கு அழைப்பு இல்லை, திமுகவில் சலசலப்பு, திமுக, கனிமொழி, முக ஸ்டாலின், உதயநிதி, buzz in dmk, cm mk stalin launches The Rising Sun magazine of dmk, udhayanidhi, duraimurugan, tr baalu, kanimozhi, kalaignar karunanidhi, The Rising Sun
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X