கோயில் நிர்வாகம் புகார்களை பதிவு செய்ய, கோயில் அமைப்பிடங்களை கண்டிப்பிடிக்க என பல்வேறு நலனுக்காக இந்து சமய அறநிலைத்துறை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்து அறநிலைத்துறை ஆப்:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் மொத்தம் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பல்வேறு பிரிவுகளில் கீழ் நிர்வாகம் அதிகாரிகள் நியமிக்கபட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களின் மீதோ அல்லது கோயில் நிர்வாகத்தில் ஏற்படும் முறைக்கேடு குறித்த புகார்களை தெரிவிக்கவும், இந்து சமய அறநிலைத்துறை தேசிய தகவலியல் மையம் மூலம் http://gdp.tn.gov.in/hrce/ என்ற இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சென்று புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த செயலியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த செயலியில் கோயில்கள், அவற்றின் நிர்வாகம், முறைகேடுகள் என இந்து சமய அறநிலைத் துறைக்கு அனுப்பும் மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், புகார்களை சமர்ப்பிக்கும் போது மனுதாரருக்கும் குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டு அனுப்பி வைக்கப்படும்.மனுக்களின் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் புகார் அளித்தவர் அறிந்துகொள்ள முடியும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டிலுள்ள கோயில்களின் அடிப்படை தகவல்கள், அவற்றின் நிலங்களுக்கான புவிசார் தகவல் அமைப்பு மற்றும் கோயிலின் அமைவிடங்களையும் இதன் மூலம் கண்டறிய முடியும் என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார்.