சோபியா எஃப்.ஐ.ஆர்-ல் இருக்கும் விவரங்கள் இது தான்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக ஆட்சிக்கு திராக கோஷம் எழுப்பி தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த சோபியா எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகியுள்ளது.

சோபியா எஃப்.ஐ.ஆர் :

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக, “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டார். விமானத்தின் சென்ற போதும், விமான நிலையத்திலும் அவர் கோஷமிட்டதால் தமிழிசை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

சோபியா மீது தொடரப்பட்ட ஐபிசி 75 குற்றவியல் சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தற்போது அவரின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகியுள்ளது.

sophia fir copy, சோபியா எஃப்.ஐ.ஆர்

sophia fir copy, சோபியா எஃப்.ஐ.ஆர்

அதில், இந்திய தண்டனை சட்டம் 290 மற்றும், தமிழக மாநகர காவல்துறை சட்டம் 75 உட்பிரிவு ஒன்று மற்றும் சி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் சோபியா என்ற பெயர் குறிப்பிடாமல், இளம்பெண் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close