தமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா ... சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை போலவே தமிழகத்திலும், லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இம்மாதம் 9ம் தேதி தமிழக சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா என்ற விசாரணை அமைப்பு உருவாக்குவது குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நடவடிக்கையில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டது. எனவே தமிழகத்திலும் லோக் அயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜூலை 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து, லோக் அயுக்தா தமிழகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக வரும் 9ம் தேதி தமிழக சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தற்போது நடைபெற்று வருவதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு தினங்களில் இந்த மசோதாவை சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை நாளை சட்டசபையில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான 9ம் தேதி நிறைவேற்றவும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

×Close
×Close