திருவாரூர் இடைத் தேர்தல் தம்பிதுரை கருத்து : ஜனவரி 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நடத்தை விதிமுறிகள் தற்போது நடைமுறையில் இருக்கிறது.
திமுக மற்றும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை ஜனவரி 4ம் தேதி மாலை அறிவிக்கும் என்று அதிகாரப் பூர்வ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : திருவாரூர் இடைத்தேர்தல் 2019 : திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
திருவாரூர் இடைத் தேர்தல் தம்பிதுரை கருத்து
இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகர் மற்றும் அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை “திருவாரூர் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.
மேலும் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் இன்னும் தராப்படாமல் இருக்கின்ற நிலையில் , தேர்தல் நடத்துவது சரி இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பொங்கல் நேரம் என்பதால் தற்போது திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.