Advertisment

லோக்சபா தேர்தல் 2019 - ஏழைகளின் பக்கம் நான் - மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi Statements in Tamil Nadu During Election 2019: தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை, கோவை, திருப்பூர் என 5 இடங்களில் தேர்தல் பிரசார உரையாற்றினார்.....

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi Statements in Election 2019, Modi Speech in Election 2019

PM Modi Statements in Election 2019, Modi Speech in Election 2019

PM Narendra Modi Top Statements in TamilNadu : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தின் 38 தொகுதிகள் ( அதிகளவிலான பணம் கைப்பற்றப்பட்டதால், வேலூருக்கு தேர்தல் நடைபெறவில்லை) புதுச்சேரி 1 தொகுதி என 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Advertisment

தேர்தல் பிரசாரத்திற்காக, தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை, கோவை, திருப்பூர் என 5 இடங்களில் தேர்தல் பிரசார உரையாற்றினார்.....

பிரதமர் மோடி, தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, கோயில் மாநகரமான மதுரையில் இருந்து துவக்கினார்...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, அரசினர் ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டடம் திறப்புவிழாவில் பங்கேற்றார்.

ஜனவரி 27ம் தேதி, மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது.....

தமிழகத்தில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

ஊழல் செய்தவர்கள் நீதிமன்றம் முன் நிறுத்தப்படுவார்கள்..

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கைகள் குறித்து அதற்கான ஆணையத்தில் பேசியுள்ளேன்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியல் இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது

ஏழைகளின் பக்கம் தான் நான் இருப்பேன் என்று மோடி பேசினார்.

பிப்ரவரி 10, திருப்பூரில் மோடியின் பேச்சு...

காமராஜரை போல் ஊழலற்ற ஆட்சியை மத்திய பாஜக அரசு நடத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது...... மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் திட்டம் சிறந்த திட்டமாகும். 'ஒரு பதவி ஒரு பென்ஷன்' திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. வரும் தலைமுறைக்காக சிறப்பான திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருவதாக கூறிய அவர் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா அமைய இருப்பதாக தெரிவித்தார். இறுதியாக 10 சதவிகித இடஒதுக்கீட்டால் பிற இடஒதுக்கீடுகள் எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மார்ச் 1 - கன்னியாகுமரியில் மோடி பேச்சு

தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது மறுவாக்கு எண்ணிக்கைக்கு புகழ்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர், நடுத்தர வர்க்கத்தினரை மோசமாக பேசியிருந்தார். தற்போது, தனது குடும்பத்துக்கு ஜாமீன் பெறுவதற் காக நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது.

முதலிடத்தில் தமிழகம் : உலகளவில் தொழில் செய்வ தற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் 142-வது இடத்தில் இருந்த இந்தியாவை 77-வது இடத்துக்கு கொண்டுவந்துள்ளோம். சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு உதவுகிறோம். 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் பெறமுடியும். முத்ரா திட்டத்தில் 15 கோடி பேருக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தலித் மக்களுக்கு ஆதரவாக எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளோம். மக்களவைத் தேர்தலில் நாங்கள் பலம், ஸ்திரத்தன்மையின் பக்கம் இருக்கிறோம். அவர் கள் பலவீனத்தின் பக்கம் இருக்கிறார்கள்.

விவசாயிகள், மீனவர்களுக்கான திட்டங்கள் : விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். 24 நாட்களில் 1.10 கோடி விவசாயி களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. துணிச்சலான, கடுமையான முடிவு களை எடுக்கும், அறுதிபெரும் பான்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள். குடும்ப அரசி யலை, வாக்கு வங்கி அரசியலை மக்கள் விரும்பவில்லை. மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியிருக்கிறது. மீனவர்களுக்கென்று தனித்துறையை உருவாக்கி இருக் கிறோம். விவசாய கடன் அட்டை திட்டம் மீனவர்களுக்கும், பெண்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. வானிலை அறிவிப்புகளை உள்ளூர் மொழியிலேயே அறியும் ஜிபிஎஸ் சாதனங்கள் மீனவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முகையூரிலும், பூம்பு காரிலும் மீன்பிடி துறைமுக திட் டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 9, கோவையில் மோடி பிரசாரம்..

கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி் கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது..... பிரதமர் கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது.நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது....என்று பிரதமர் மோடி பேசினார்.

ஏப்ரல் 13, இராமநாதபுரத்தில் மோடி

கலாம் பிறந்த மகத்தான இப் புண்ணிய பூமியில் வணக்கத்தைத் தெரிவித்து கொள்கிறேன். காசி பார்லிமென்ட் உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். அப்துல் கலாம் கண்ட கனவுகளை நிறைவேற்றும் இடத்தில் உள்ளோம். அவரது கனவுகளை நனவாக்கி இந்தியாவை வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வோம். 2014ல் இருந்த இந்தியா இப்போது இல்லை, முழுவதுமாக மாற்றியுள்ளோம். வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்பு மூலம் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மே 23 -மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்கும் போது நீர்வளத் துறைக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மீனவர்கள் வாழ்வை மேம்படுத்த புதிய பாதை உருவாக்கி உள்ளோம். மீனவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்படும். விஞ்ஞானம் மூலம் மீனவர்கள் பல நன்மைகள் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வட்டார மொழியில் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூக்கையூர், பூம்புகார் துறைமுக பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சர்வதேச கடல் எல்லை கடக்க வேண்டிய உள்ளது. தூக்குத் தண்டனை வரை சென்ற தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 1,900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மேம்பாடு, அனைவரும் இணைந்த மேம்பாடு குறிக்கோளாக கொண்டுள்ளோம். காங்., திமுக கூட்டணிக்கு நாட்டை பற்றிய சிந்தனை இல்லை.

அவர்கள் இலக்கு மோடியை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே. சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையின் போது, திமுக., காங்., கூட்டணி, இந்திய ராணுவத்தைக் குறை கூறினர். காலம் மாறி விட்டது. பயங்கரவாத தாக்குதலை அனுமதிக்க முடியாது. ஓட்டு வங்கியை நோக்காகக் கொண்ட திமுக., காங்., கூட்டணி பேதம் பேசி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் நம் நம்பிக்கையை அழிக்க முயல்கின்றனர். பா.ஜ.க இருக்கும் வரை அது நடக்காது. காங்., கண்ணோட்டம் வெட்கக்கேடானது. 356 ஐ காங்., பயன்படுத்தி எம் ஜி ஆர் அரசைக் கலைத்தனர். திமுக ஆட்சியையும் கலைத்துள்ளனர். காங்., திமுக., முஸ்லிம் லீக்கிற்கு வாக்களித்தால் குறைவான வளர்ச்சிக்கு வித்திடும். காங் கூட்டணிக்கு வாக்களித்தால் அரசியலில் கிரிமினல் நுழைய வழி வகுக்கும்'' என்றார்

Tamilnadu Narendra Modi General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment