/indian-express-tamil/media/media_files/c95A4fyOKHOf86DmkHp9.jpg)
Tamil Nadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், பாஜக கூட்டணியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் களத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து, பிரேமலதா வெள்ளிக்கிழமை (மார்ச் 29) திருப்பூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு பெற்றோர், தங்களது மகனை பிரேமலதா கைகளில் கொடுத்து குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறினர்.
#WATCH | திருப்பூரில் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பரப்புரை செய்தபோது விஜயகாந்த், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்களை சேர்த்து குழந்தைகளுக்கு பெயர் வைத்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா #SunNews | #Thiruppur | #Premalathapic.twitter.com/bZT2uaLkwS
— Sun News (@sunnewstamil) March 29, 2024
சிரித்துக் கொண்டே அந்த குழந்தையை கையில் வாங்கிய பிரேமலதா, ’இந்த கூட்டணியினுடைய அடையாளமாக புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர் இருவரின் பெயரை ஒன்றாக இணைத்து ’விஜய ராமச்சந்திரன்’ என்கிற வெற்றிப் பெயரை இந்த குழந்தைக்கு சூட்டுகிறேன்.. இவர் எல்லா வளங்களையும், நலங்களையும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று அவரை மனதார வாழ்த்துகிறோம்’, என்றார்.
மேலும், இன்னொரு ஆண் குழந்தைக்கு, கேப்டன் பெயரையும், அம்மா பெயரையும் ஒன்றாக இணைத்து ‘விஜய ஜெயன்’ என்கிற பெயர் சூட்டுவதாக பிரேமலதா அறிவித்தார்
அந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.