/indian-express-tamil/media/media_files/hhb5TVf91AENvcbkki4n.jpg)
Tamil Nadu
ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடிந்த முதல் பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து சமீப வாரங்களில், பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வருகை தந்தது உட்பட, மாநிலத்தில் கணிசமான பிரச்சார முயற்சியை பாஜக முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏபிபி நியூஸ் மற்றும் சிவோட்டர் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு, திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி மாநிலத்தின் 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மீதமுள்ள 9 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மற்றும்கொங்கு மக்கள் தேசிய கட்சிஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்த கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரே தொகுதியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த அக்டோபரில் பாஜகவுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து, கட்சிகளுக்கு இடையே அதிகரித்து வரும் விரோதம் மற்றும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதிமுகஉச்சக்கட்டப் போரை எதிர்கொள்கிறது.
இந்த கணிப்புகள் துல்லியமாக நிரூபிக்கப்பட்டால், 18வது மக்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மக்களவையில் திமுக மீண்டும் மூன்றாவது பெரிய கட்சியாக முடியும். 2019 இல், பாஜக மொத்தம் 293 இடங்களையும், காங்கிரஸ் 50 இடங்களையும், திமுக 20 இடங்களையும் வென்றது.
39 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு, நாட்டின் தென் பகுதியில் இருந்து அதிக மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.