திண்டுக்கல் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 22வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இருந்தன.
2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் அமைந்துள்ளது. மலர்கள் அதிகம் விளைகின்ற பகுதியாக இந்த மக்களவை தொகுதியில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி விளங்குகிறது.
இந்த தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒட்டன்சத்திரத்தில் தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.
சிறு தொழில்கள்மூலம் இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். திண்டுக்கல், நிலக்கோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் உள்ளன.
கொடைக்கானல் உள்பட முக்கிய சுற்றுலா தளங்களான ஆறுகள், அணைகள் இந்த தொகுதியில் உள்ளன.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக எட்டு முறை வெற்றிபெற்றுள்ளது (இடைத்தேர்தல் உட்பட). காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக 4 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
முதல் தேர்தலிலேயே அதிமுக முதல் வெற்றி
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய பிறகு, முதன்முதலாக அக்கட்சி களம் கண்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில்தான். முதல் தேர்தலிலேயே அதிமுக முதல் வெற்றியையும் பெற்றது. இரட்டை இலை சின்னத்தை முதன்முறையாகப் பெற்றதும் இந்தத் தேர்தலில்தான்.
அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான திண்டுக்கல் தொகுதியிலிருந்து கே.மாயத்தேவர் தேர்வு செய்யப்பட்டார்.
நேரடியாக களமிறங்கிய திமுக
1980ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் நேரிடையாக களமிறங்கி வெற்றிக் காணவில்லை. காங்கிரஸோடு கூட்டணியின்போது, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸுக்கு திமுக அளித்து வந்தது.
அதனுடைய சிறந்த பயனாக 2004 முதல் 2009 என இரண்டு முறை என். எஸ். வி. சித்தன் வெற்றி பெற்றார்.
35 ஆண்டுகளுக்கு பின்னர், திமுக இந்த தொகுதியில் நேரடியாக 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தொகுதியை கைப்பற்றியது. இதில் திமுக வேட்பாளர் வேலுசாமி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை விட 5,38,972 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இங்கு வென்றவர்கள் (Credit: Wikipedia)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“