சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை வாஷ் அவுட் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணி வென்றது. சென்னையிலும் மூன்று மக்களவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.
Advertisment
தி இந்து நாளிதழில் வெளியான செய்தியின் படி, 2024 தேர்தலில், சென்னையின் வாக்குச் சாவடிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது, அவர்களின் வாக்குவங்கியில் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது சேரி, குடிசைகள், அல்லது தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் அடங்கும்.
இதற்கு நேர்மாறாக, அபார்ட்மென்ட் அல்லது பிளாட்டு போன்ற பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது,
இரண்டு தரவுத்தளங்களை பயன்படுத்தி சென்னை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு உள்ளிட்ட மூன்று மக்களவை தொகுதிகளுக்காக இந்தத் தகவல் பெறப்பட்டன.
முதல் டேட்டாபேஸ்,2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்குச் சாவடிகள் மற்றும் பகுதிகளின் பட்டியலாகும்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சி வாரியாகப் பதிவான வாக்குகளைப் பட்டியலிடும் தேர்தல் ஆணையத்தின் “படிவம்-20” தரவு, இரண்டாவது தரவுத்தொகுப்பை உருவாக்கியது. ஒவ்வொரு சட்டமன்றப் பகுதியிலும் வாக்குச் சாவடி எண்ணை முக்கியமாகப் பயன்படுத்தி இந்த இரண்டு தரவுத்தளங்களும் இணைக்கப்பட்டன.
கீழே உள்ள வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு வாக்குச் சாவடியைக் குறிக்கிறது…
அதன்படி ஏழ்மையான பகுதிகளில் இருந்து திமுகவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதை தரவு காட்டுகிறது. சேரி, குடிசைகள் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளில், திமுகவின் வாக்கு சதவீதம் பாஜகவை விட அதிக வித்தியாசத்தில் உள்ளது.
அதேபோல் வசதி படைத்த பகுதிகளில் ஒப்பீட்டளவில் திமுகவை விட பாஜக முன்னிலையில் இருந்ததை இந்த தரவு காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“