தமிழகத்தில் மார்ச் 20-ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்: தேர்தல் முழு அட்டவணை

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் மார்ச் 20-ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிகப்படும்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும். தமிழ்நாட்டில் மார்ச் 20-ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிகப்படும்.

author-image
WebDesk
New Update
Lok Sabha election 2024 Full schedule in tamil

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lok Sabha Election | Election Commission: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அவை அமைக்கப்பட வேண்டும். 18-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Lok Sabha Election Dates 2024 Live Updates

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதற் கட்ட தேர்தல் ஏப்ரல் 19; 2 ஆம் கட்டம் ஏப்ரல் 26; 3 ஆம் கட்டம் மே 07; 4 ஆம் கட்டம் மே 13; 5 ஆம் கட்டம் மே 20; 6 ஆம் கட்டம் மே 25; 7 ஆம் கட்டம் ஜூன் 01 ஆம் நடைபெறும். 

Advertisment
Advertisements

ஆங்கிலத்தில் படிக்கவும்: Lok Sabha Elections 2024 schedule announced: Check dates, constituency-wise details

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும். மார்ச் 20 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 27 ஆகும். மார்ச் 28 அன்று வேட்புமனு மறுபரிசீலனை நடக்கும். வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி ஆகும். 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிகப்படும். 

publive-image

publive-image

publive-image

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Election Commission Lok Sabha Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: