கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும். தவறாக சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலை தவறான விஷயங்களை பொய்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கலாம். மருதமலையில் கரண்ட் தரவில்லை என்று சொன்னார், முன்னதாகவே திமுக கரண்ட் தந்து விட்டது.
பொய்ச் செய்திகளை வெளியிடவே பாஜகவில் தனி அமைப்பு வைத்திருக்கின்றனர்.
கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்ட பின்னரும் அதற்கு அடிக்கல் நாட்டிய புகைப்படத்தை வெளியிட்டு மருத்துவமனை கட்டவில்லை என பொய் பிரச்சாரம் செய்தனர்,
இப்படி ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நம் பிள்ளைகள் வசதியாக மரியாதையாக நல்ல வேலை கிடைத்து வாழ வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ளவர்களின் கனவு. மணிப்பூரில் உள்ளவர்களின் கனவு தங்கள் பிள்ளைகளை உயிரோடு பார்ப்போமா என்பதாக இருக்கிறது.
பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் போதும் என்பதாக இருக்கின்றன.
அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .
பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் இவர்களில் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன?
மணிப்பூரில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள் பிரதமர் இது குறித்து கேட்டிருக்கின்றாரா ? 44 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்து வருகின்றன பெண்கள் மீதான குழந்தைகள் மீதான கொடுமை இரண்டு மடங்காக மாறி இருக்கின்றன.
மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நடந்த தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என போராடினர்.
சேலத்தில் இருந்த இரண்டு விவசாயிகள் பிஜேபிக்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமன் அனுப்பினர். பாஜகவில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் சேர்ந்தால் அவர்களின் குற்றம் போகின்றது.
தேர்தல் பத்திரத்தை கண்டுபிடித்து அதனை சட்டம் பூர்வமாக்கி, முக்கால்வாசி தேர்தல் பத்திரம் பாஜகவினருக்கு தந்திருக்கின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ரைடு விட்டு தேர்தல் பத்திரம் வாங்கி இருக்கின்றனர்.
கோடக் மகேந்திரா நிறுவனத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே 10 கோடிக்கு தேர்தல் பத்திரம் பாஜகவினருக்காக வாங்குகின்றனர்.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரிசர்வ் வங்கி பாஜகவினர் கேட்டதற்கு ஒப்புக்கொள்கின்றன
தேர்தல் பத்திரம் ஒரு சட்டபூர்வமான ஊழல். இதில் பாஜகவினர் ஊழல் பற்றி பேசி வருகின்றனர். டெல்லி முதல் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்திருக்கின்றனர். குற்றத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு அதிக தேர்தல் பத்திரம் தந்திருக்கின்றார்.
இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை முடிந்துவிடும். அப்படி ஒரு விபத்து நடந்தால் இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
என்ன சட்டம் வேண்டுமானால் கொண்டு வருவார்கள் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் இவர்கள் அமல்படுத்திருக்கின்றனர்.
பாஜகவின் இது போன்ற கொடிய திட்டங்களுக்கு துணை நின்றவர்கள் அதிமுகவினர். இன்று அவர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கின்றார்
திமுக அரசாங்கத்தை பற்றி மட்டுமே பேசியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி பற்றி பேசவில்லை. பிரதமர் முன்பாக கை கட்டி நிற்க வேண்டும் என்பதனால் இதுவரை பேசவில்லை. இப்படி இருவரும் ஓட்டு கேட்டு வருவார்கள் அவர்களை திருப்பி அனுப்பி கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் 50,000 தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வந்த பிறகு மூடப்பட்டிருக்கின்றன.
2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார். வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் என்று சொல்கின்றார். ஜிஎஸ்டி பார்மை சரியாக பில்லப் செய்யவில்லை என்று கூட அதற்கு அபராதம் வைத்து சித்ரவதை செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி.
68,700 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் ரத்து செய்து இருக்கின்றார்கள். விமான நிலைய விரிவாக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதனை செய்ய மறுக்கின்றார்கள் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு பத்து நாட்களில் ஏர்போர்ட்டை தருகின்றார்கள்.
அம்பானியும் அதன் ஆட்சி இது. சாமானியர்களுக்கான ஆட்சி இல்லை. மோடி ஆட்சிக்கு வந்த போது ஒரு சிலிண்டர் விலை 410 ரூபாய். இப்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விற்கின்றார்கள். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைக்கும் பொழுது சிலிண்டர் விலை குறைக்கப்படும் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என அண்ணன் தளபதி அறிவித்திருக்கின்றார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி 10 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத்துவப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
1339 கோவில்களுக்கு திமுக ஆட்சியில் குடமுழுக்கு செய்திருக்கின்றார்கள்.
ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக நிதியை கோயில்களுக்கு வைத்து தந்திருக்கின்றார்கள். நம் நிதியை அனைத்தும் ஒன்றிய அரசாங்கம் பிடுங்கி கொண்டு செல்கின்றனர். ஒரு ரூபாய் தந்தால் 28 பைசா தருகின்றார்கள் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.