Advertisment

Lok Sabha Election Results 2024 Seeman NTK Votes Live Updates: 1,27,642 வாக்குகள் பெற்ற காளியம்மாள்

Lok Sabha election 2024 | NTK LIVE updates | 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் எண்ணிக்கை, அக்கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளின் நிலவரத்தை அறிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha election 2024 NTK LIVE Updates Naam Tamilar party vote count live update

NTK LIVE updates | தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

Ntk | Seeman | Lok Sabha Election | 2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. முதல்கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்.19ஆம் தேதி தொடங்கியது. நிறைவு கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடந்தது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வந்துள்ளன.

Advertisment

இந்தத் தேர்தலில் கடந்த தேர்தலைபோல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழ்நாடு (39), புதுச்சேரியில் (1) மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆண்கள் 20, பெண்கள் 20 என சரிசமமாக பிரித்து பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்ப்பளித்துள்ளார்.

இந்தக் கட்சி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள், அக்கட்சி வேட்பாளர்களின் நிலவரம் குறித்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Jun 04, 2024 20:47 IST
    1,27,642 வாக்குகள் பெற்ற காளியம்மாள்


    நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட காளியம்மாள் 1,27,642 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:33 IST
    விருதுநகரில் 74106 வாக்குகள் பெற்ற நாம் தமிழர்

    விருதுநகர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கவுசிக் 74106 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:33 IST
    விருதுநகரில் 74106 வாக்குகள் பெற்ற நாம் தமிழர்

    விருதுநகர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கவுசிக் 74106 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 15:11 IST
    திருநெல்வேலி; 50 ஆயிரம் வாக்குகளை கடந்த நாம் தமிழர்

    திருநெல்வேலி 12 வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் 271251 வாக்குகளுடன் முதலிடத்தில்  உள்ளார். பாஜக வேட்பாளர் 189921 வாக்குகளுடன் இரண்டாம் இடமும், அதிமுக 49109 வாக்குகளுடன் 4ம் இடமும், நாம் தமிழர் கட்சி 52205 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 14:30 IST
    7 தொகுதிகளில் நாம் தமிழர் 3ம் இடம்

    நாம் தமிழர் வேட்பாளர்கள் திருநெல்வேலி, புதுச்சேரி, தென்காசி, நாகப்பட்டினம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர் மற்றம் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 3ம் இடம் பிடித்துள்ளனர்.



  • Jun 04, 2024 12:53 IST
    திருநெல்வேலி: அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்

    திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 35353 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சி ராணியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
    ஜான்சி ராணி 32156 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் 122080 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 182101 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 12:47 IST
    கிருஷ்ணகிரி: நாம் தமிழர் வேட்பாளர் வித்யா வீரப்பன் பின்னடைவு

    கிருஷ்ணகிரி நாம் தமிழர் வேட்பாளர் வித்யா வீரப்பன் பின்னடைவை சந்தித்துள்ளார்.



  • Jun 04, 2024 12:14 IST
    சிவகங்கை: பா.ஜ.க.வை நெருங்கும் நாம் தமிழர்

    சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 60839 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அடுத்த இடத்தில் அதிமுகவின் சேவியர் தாஸும், மூன்றாம் இடத்தில் பா.ஜ.க.வின் தேவநாதனும் உள்ளனர்.
    தேவநாதன் 23433 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் எழிலரசி 21544 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 11:46 IST
    திருநெல்வேலி: அ.தி.மு.க. நாம் தமிழர் இடையே போட்டி

    திருநெல்வேலி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஷ் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 17,706 வாக்குகளுடன் அதிமுக ஜான்சி ராணி மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் 17762 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.



  • Jun 04, 2024 10:32 IST
    கன்னியாகுமரியில் 4ம் இடத்தில் நாம் தமிழர்

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸின் விஜய் வசந்த் 18,323 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், நாம் தமிழர் 4ம் இடத்தில் உள்ளது. மரிய ஜெனிபர் 2144 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 10:29 IST
    ராதாபுரம் தொகுதியில் நாம் தமிழர்

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் 4515 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 2492 வாக்குகளும் அ.திமுக 734 வாக்குகளும் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் 715 வாக்குகளும் பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 07:11 IST
    கிடைக்காத கரும்பு சின்னம்

    2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

    இந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக்சின்னத்தில் போட்டியிடுகிறது.  



  • Jun 04, 2024 07:11 IST
    நாம் தமிழர் கட்சியின் தொகுதி வாரியான வேட்பாளர்கள்

    மு.ஜெகதீஷ் சந்தர் ( திருவள்ளூர் ), அமுதினி ( வட சென்னை ), சு.தமிழ்ச்செல்வி ( தென் சென்னை ), இரா.கார்த்திகேயன் ( மத்திய சென்னை ), வெ.ரவிச்சந்திரன் ( திருப்பெரும்புதூர் ), வி.சந்தோஷ்குமார் ( காஞ்சிபுரம் ), அப்சியா நஸ்ரின் ( அரக்கோணம் ), தி.மகேஷ்குமார் ( வேலூர் ),

    வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் ( கிருஷ்ணகிரி ), அபிநயா பொன்னிவளவன் ( தர்மபுரி ), இரா.ரமேஷ்பாபு ( திருவண்ணாமலை ), கு.பாக்கியலட்சுமி ( ஆரணி ), மு.களஞ்சியம் ( விழுப்புரம் ), ஆ.ஜெகதீசன் ( கள்ளக்குறிச்சி ), க.மனோஜ் குமார் ( சேலம் ), க.கனிமொழி ( நாமக்கல் ), மு.கார்மேகன் ( ஈரோடு ), மா.கி.சீதாலட்சுமி ( திருப்பூர் ), ஆ.ஜெயக்குமார் ( நீலகிரி ), ம.கலாமணி ஜெகநாதன் ( கோவை ), நா.சுரேஷ்குமார் ( பொள்ளாச்சி ), கயிலை ராஜன் ( திண்டுக்கல் ), ரெ.கருப்பையா ( கரூர் ),

    ஜல்லிக்கட்டு ராஜேஷ் ( திருச்சி ), இரா.தேன்மொழி ( பெரம்பலூர் ), வே.மணிவாசகன் ( கடலூர் ), இரா.ஜான்சிராணி ( சிதம்பரம் ), பி.காளியம்மாள் ( மயிலாடுதுறை ), மு.கார்த்திகா ( நாகப்பட்டினம் ), ஹூமாயூன் கபீர் ( தஞ்சாவூர் ), வி.எழிலரசி ( சிவகங்கை ), மோ.சத்யாதேவி ( மதுரை ), மதன் ஜெயபாலன் ( தேனி ), சி.கவுசிக் ( விருதுநகர் ), சந்திர பிரபா ஜெயபால் ( ராமநாதபுரம் ),

    ரொவினா ரூத் ஜேன் ( தூத்துக்குடி ), சி.ச.இசை மதி வாணன் ( தென்காசி ), பா.சத்யா ( திருநெல்வேலி ), மரிய ஜெனிபர் ( கன்னியாகுமரி ), இரா.மேனகா ( புதுச்சேரி ) இது தவிர விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு இரா.ஜெமினி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.



  • Jun 04, 2024 07:10 IST
    தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி

    தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காண்கிறது.

    தலா 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் சரி சமமாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் மக்களவைத் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 16 மருத்துவர்கள், 6 பொறியாளர்கள், 7 ஆசிரியர்களும் அடங்குவர். இது தவிர கல்வியாளர், முனைவர், தொழில்முனை வோர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.



Ntk Pmk Seeman Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment