Advertisment

Tamil News Updates| ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன்

Tamil Updates | தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடக்கும் முக்கிய தகவல்கள் இங்கே உள்ளன. அந்த வகையில், அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBCID arrest Former DRO, Poonamalli - Bangalore NH extension work 150 crore scam case, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ரூ.150 கோடி முறைகேடு, தலைமறைவாக இருந்த டி.ஆர்.ஓ கைது, CBCID arrest Former DRO Narmadha, Poonamalli - Bangalore NH extension procject, 150 crore scam case

Tamil LIVE Updates in IE:

Tamil News Updates | அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் படிக்கலாம்.

Advertisment

பெட்ரேல் டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டர் ரூ.102க்கும் டீசல் லிட்டர் ரூ.93.60க்கும் விற்பனையாகிவருகிறது.

தங்கம் விலை

தங்கத்தின் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.6900 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.55,200 ஆக காணப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7370 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.58,960 ஆக உள்ளது.

ஈரான் பிரதமர் மரணம்

ஈரானின் வடமேற்கு மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.

 • May 20, 2024 22:34 IST
  காவிரி உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் - இ.பி.எஸ் விமர்சனத்துக்கு துரைமுருகன் பதில்

  சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை குறித்து தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தமிழக நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அனைத்து விதத்திலும் தமிழக அரசு நிலைநாட்டும்; காவிரி தீர்ப்பினை மீறும் விதமாக கேரளா, கர்நாடக அரசுகள் செயல்பட்டால் தமிழக அரசு உறுதியோடு எதிர்க்கும்” என்று பதிலளித்துள்ளார். • May 20, 2024 21:26 IST
  சிலந்தி ஆற்றில் தடுப்பணை: தமிழகத்தைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சி - சீமான் கண்டனம்

  நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “சிலந்தி ஆற்றின் குறுகே தடுப்பணை கட்டும் செயல் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூழ்ச்சி. கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் செய்தி தமிழக வேளாண் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது; தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின், தமிழக ஆற்று நீர் உரிமை பறிபோவது தொடர்கதையாகி விட்டது.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். • May 20, 2024 21:12 IST
  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. • May 20, 2024 20:26 IST
  இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப்போல் இயல்பானது - இசைஞானி இளையராஜா

  ஐ.ஐ.டி மெட்ராஸில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய தொடக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு: “இசையமைப்பது எனக்கு இசையமைப்பது எனக்கு மூச்சு விடுவதைப்போல் இயல்பானது; நன்றாக இசையமைப்பதாக யாராவது சொன்னால் நன்ற்அக சுவாசிக்கிறீர்கள் என்று என சொல்வதுபோல் உள்ளது.” என்று கூறினார். • May 20, 2024 20:21 IST
  புதுக்கோட்டை, விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்து: உயிரிழந்தவருக்கு ஸ்டாலின் இரங்கல் 

  புதுக்கோட்டை, விராலிமலை பட்டாசு குடோனில் வெடி விபத்தில் உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். • May 20, 2024 20:15 IST
  மக்களவைத் தேர்தல் 5-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: 57.38% வாக்குப்பதிவு

  மக்களவைத் தேர்தல் 2024 5-ம் கட்ட வாக்க்குப் பதிவில், 57.38% வாக்குகள் பதிவாகி உள்ளது. மேற்கு வங்கத்தில், கட்சிகளிடமிருந்து 1000க்கும் மேற்பட்ட புகார்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.

  மேற்கு வங்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது, வாக்குச் சாவடிகளுக்குள் நுழைய ஏஜென்டுகள் தடுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் என பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு 1036 புகார்கள் வந்துள்ளன.
  மேற்கு வங்காளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது, வாக்குச் சாவடிகளுக்குள் நுழைய ஏஜென்டுகள் தடுக்கப்பட்டது, வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் என பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு 1036 புகார்கள் வந்துள்ளன. • May 20, 2024 19:24 IST
  மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி  - தமிழக அரசு உத்தரவு

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மே 2-ம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றுச்சூழல்  துறையிடம் சமர்பித்திருந்தது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10-ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  • May 20, 2024 18:58 IST
  ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராக முகமது மொக்பர் நியமனம்

  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் தற்காலிக அதிபராக முகமது மொக்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். • May 20, 2024 18:28 IST
  மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

  மக்களவைத் தேர்தல் 2024 5-ம் கட்டமாக 49 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதி நிறைவடைந்தது. உ.பி. 14, மகாராஷ்டிரா 13, மேற்கு வங்கம் 7, ஜார்க்கண்ட் 3, பீகார், ஒடிசா தலா 5, ஜம்மு காஷ்மீர் - லடாக் தலா ஒரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. • May 20, 2024 17:53 IST
  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு; ஒருநாள் துக்கம் அனுசரிப்பு - இந்திய அரசு அறிவிப்பு

  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி நாளை (மே 21) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாளை ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும் அறிவித்துள்ளது. • May 20, 2024 17:51 IST
  சத்தீஸ்கரில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து; 18 பேர் பலி!

  சத்தீஸ்க்ர் மாநிலம், கவர்தாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • May 20, 2024 16:55 IST
  அகமதாபாத்தில் இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

  குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை தீவிரவாதிகளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது. • May 20, 2024 16:52 IST
  கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் அனுமதி

  கஞ்சா வைத்திருந்த வழக்கில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு தேனி மாவட்ட காவல்துறை மனு செய்திருந்த நிலையில், சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சவுக்கு சங்கரை 3 வேளை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க நீதிபதி செங்கமலச்செல்வன் அனுமதி அளித்துள்ளார்.  • May 20, 2024 16:14 IST
  போதைப் பொருள் கடத்தல் வழக்கு; ஜாஃபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத் துறை விசாரணை


  போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • May 20, 2024 16:06 IST
  குழந்தை பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவு

   

  மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
  மதுரை  கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில்  சாமுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. • May 20, 2024 14:35 IST
  போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம்

  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. • May 20, 2024 14:03 IST
  சிலந்தி ஆற்றில் அணை; கேரள அரசை கண்டிக்க தி.மு.க.வுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

  சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டிவரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். • May 20, 2024 13:56 IST
  5ம் கட்ட வாக்குப்பதிவு; 1 மணி நிலவரப்படி 36.73% வாக்குப்பதிவு

  மக்களவை தேர்தலில் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பீகாரில் 34.62, மராட்டியத்தில் 27.78, மேற்கு வங்கத்தில் 48.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. • May 20, 2024 13:53 IST
  ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி ஆய்வு

  உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள பூத் ஒன்றுக்கு சென்று ராகுல் காந்தி ஆய்வு நடத்தினார். • May 20, 2024 13:52 IST
  தெண்டுல்கர் வாக்கு செலுத்தினார்

  மும்பையில் தனது மகன் அர்ஜூன் உடன் சச்சின் தெண்டுல்கர் வாக்கு செலுத்தினார். • May 20, 2024 12:47 IST
  மக்களவை தேர்தல்; 5ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் என்ன?

  மக்களவை தேர்தலில் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், பீகாரில் 21.11%, மகாராஷ்டிராவில் 15.93%,  மேற்கு வங்கத்தில் 32.70% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  தொடர்ந்து, ஒடிசாவில் 21.07%, ஜார்கண்டில் 26.18% வாக்குப்பதிவும், ஜம்மு காஷ்மீரில் 21.37%, லடாக்கில் 27.87%, உத்தரப்பிரதேசத்தில் 27.76% வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது.
  அந்த வகையில் 11 மணி நேர வாக்குப்பதிவு நிலவரம்

  • பீகார் -21.11%
  • மராட்டியம் - 15.93%
  • ஒடிசா - 32.70%
  • ஜார்க்கண்ட் - 26.18%
  • ஜம்மு காஷ்மீர் - 21.37%
  • லடாக் - 27.87%
  • உத்தரப் பிரதேசம் 27.76% • May 20, 2024 12:39 IST
  மும்பையில் வாக்களித்தார் ரகானே

  இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே, மும்பையில் தனது வாக்கினை செலுத்தினார். இன்று நாடு முழுக்க மக்களவை தேர்தலில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    • May 20, 2024 12:18 IST
  சசிகலா, ஓபிஎஸ் உடன் கூட்டணி இல்லை; எஸ்.பி. வேலுமணி

  சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்ளும் எண்ணமும், கூட்டணி சேர்க்கும் எண்ணமும் இல்லை என எஸ்.பி. வேலுமணி கூறினார். • May 20, 2024 11:58 IST
  40 மக்களவை தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்; எடப்பாடி பழனிசாமி

   

  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இன்று பேட்டியளித்தார்.
  அப்போது, “தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்” என்றார். • May 20, 2024 11:40 IST
  மக்களவை தேர்தல் 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

  மக்களவை தேர்தலில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை தேர்தல் ஆணையத்துக்கு 470 புகார்கள் வந்துள்ளன.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment