/indian-express-tamil/media/media_files/Qc4EP6OjPC0fEwtNiylt.jpg)
Tamil Nadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், பாஜக கூட்டணியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் களத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள வாணாபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக் கிழமை இரவு (மார்ச் 31) கலந்து கொண்டார்.
அப்பொழுது வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும், விஜயகாந்த் பற்றியும் உருக்கமாக பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பிரேமலதா தேம்பி தேம்பி அழுதார்.
அந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கேப்டன் பற்றி வெறி தீர பேசிய நிர்வாகி..!துக்கம் தாளாமல் சிறுபிள்ளையாக தேம்பி தேம்பி அழுத பிரேமலதா
— Thanthi TV (@ThanthiTV) April 1, 2024
#thanthitv#tamilnadu#premalathavijayakanth#vijayaprabhakaran#loksabhaelection2024#electioncampaign#elections2024pic.twitter.com/8R5LbggYA4
மறைந்த தேமுதிக தலைவர்விஜயகாந்த், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.