ஸ்ரீபெரும்புதூர், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் ஒன்று.
ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இதில் உள்ளன. இதில் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய மூன்றும் சென்னை மாவட்டத்திலும், பல்லாவரம், தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டடது.
சர்வதேச அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், ‘மெப்ஸ்’ ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகும். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன.
தமிழகம் மட்டுமல்ல, வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் இங்கு பணியாற்றுகிறார்கள்.
தேர்தல் வரலாறு
1962முதல் மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது இந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி.
இத்தொகுதியில் திமுக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் தொடர்ந்து இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை வென்றவர்கள்
1967- சிவசங்கரன் (திமுக)
1971- லட்சுமணன் (திமுக)
1977- சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)
1980- நாகரத்தினம் (திமுக)
1984- மரகதம் சந்திரசேகர் (அதிமுக)
1989- மரகதம் சந்திரசேகர் (அதிமுக)
1991- மரகதம் சந்திரசேகர் (அதிமுக)
1996- நாகரத்தினம் (திமுக)
1998- வேணுகோபால் (அதிமுக)
1999- கிருட்டிணசாமி (திமுக)
2004- கிருட்டிணசாமி (திமுக)
2009- டி.ஆர். பாலு (திமுக)
2014- ராமச்சந்திரன் (அதிமுக)
2019- டி.ஆர். பாலு (திமுக)
கடந்த மக்களவை தேர்தல்
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் களம் கண்ட டி.ஆர். பாலு 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மீண்டும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர். பாலுவே இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
83 வயதாகும் திமுக பொருளாளர், டி.ஆர்.பாலு 1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாக உள்ளார். இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு தொகுதியை தக்க வைத்து வருகிறார்.
இதனால் இந்த தேர்தலிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை திமுக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம் (2024)
ஆண் வாக்காளர்கள் - 11,69,344
பெண் வாக்காளர்கள் - 11,88,754
மூன்றாம் பாலினத்தவர் - 428
மொத்த வாக்காளர்கள் - 23,58,526
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
மதுரவாயல் - கணபதி (திமுக)
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் (திமுக)
ஆலந்தூர் - தஅ. மோ. அன்பரசன் (திமுக)
ஸ்ரீபெரும்புதூர் - செல்வப் பெருந்தகை ( காங்கிரஸ் )
பல்லாவரம் - கருணாநிதி (திமுக)
தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா (திமுக)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“