விருதுநகர் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 34வது தொகுதி ஆகும். பெருமளவு வறட்சியான பகுதிகளை கொண்ட இடம் என்பதால் இங்கு விவசாயம் குறைவுதான்.
பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங், நூற்பு ஆலைகள் என முக்கிய தொழில்கள் நடைபெறும் விருதுநகரும், சிவகாசியும் இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. இந்த தொழில்களை சார்ந்து தான் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் இது சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விருதுநகர் மக்களவைத் தொகுதியாக ஆனது.
முந்தைய சிவகாசி தொகுதியிலும் சரி, மறு சீரமைப்புக்கு பிறகு உருவான விருதுநகர் தொகுதியிலும் சரி வழக்கமாகவே திராவிட கட்சிகளின் கோட்டையாகவே இந்த தொகுதி இருந்து வந்துள்ளது.
காமராஜர், எம்ஜிஆர் வென்ற தொகுதி
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, காமராஜருக்கு இரண்டு முறை (1957, 1962) வெற்றியைத் தேடித் தந்த பெருமைக்குரியது. 1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் என்பது மற்றொரு சிறப்பு.
இந்தத் தொகுதியில் ஐந்து முறை அதிமுக வென்றுள்ளது.
1967 மக்களவைத் தேர்தலில் சிவகாசி மக்களவைத் தொகுதியில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி வென்றார். 1971, 1977 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது.
மதிமுக மூன்று முறை வென்றிருக்கிறது. இதில் 1998, 1999 தேர்தல்களில் வென்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
எனவே திமுக, அதிமுக தவிர மதிமுகவுக்கும் வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.
2019 மக்களவை தேர்தல்
இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளரான அழகார்சாமியை, 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
வாக்குப்பதிவு விவரம்
தற்போதைய பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“