தி.மு.க. Vs அ,தி.மு.க? இந்த முறை கோட்டை யாருக்கு- தேனி மக்களவை தொகுதி ஒரு பார்வை
தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில் உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம் , போடிநாயக்கனூ ர் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் உள்ளன.
தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில் உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம் , போடிநாயக்கனூ ர் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் உள்ளன.
தேனி, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 33வது தொகுதி ஆகும்.
Advertisment
பசுமையாக காணப்படும் தேனி தொகுதி அதிக அளவில் கிராமப்புறங்களையும், சிறு நகரங்களையும் கொண்டது. விவசாயம் இங்கு பிரதான தொழிலாக உள்ளது.முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவை இத் தொகுதியின் முக்கிய நீராதாரங்கள்.
தேனி தொகுதியில் பரவலாக பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினர் பெருமளவிலும், ஆதி திராவிடர், நாயக்கர், சிறுபான்மை சமுதாயத்தினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
மறுசீரமைப்புக்கு முன்பாக இது பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. இப்போது தேனி மக்களவை தொகுதியாக உள்ளது.
Advertisment
Advertisements
முன்னர் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி , பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் , போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இந்நிலையில் தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில்உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம் , போடிநாயக்கனூ ர் தொகுதிகளும்மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் உள்ளன.
தொடக்க காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்கு போட்டி இருந்துள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, டி.டி.வி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகிய 3 முதல்வர்கள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இத்தொகுதிக்கு உள்ள ஒரு தனி அம்சமாகும். எனவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள தொகுதியாக இருந்து வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தேனி தொகுதியில் திமுக சார்பில் கம்பம் நடராஜன்1980, ஞானகுருசாமி 1996, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரூண் 2004, 2009 தேர்தல்களில் வென்றுள்ளனர்.
2019 மக்களவைதேர்தல்
கடந்த 2019 மக்களவைதேர்தலில்தேனி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 33 பேர் போட்டியிட்டனர்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் ஆவார்.
ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதுதொடர்பான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், இவர் தொகுதி பக்கம் வந்து மக்களை பார்த்ததே இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
இதை பயன்படுத்தி தேனி மக்களவைத் தொகுதியை திமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலில் கைப்பற்ற முயன்று வருகின்றன.
பெரியகுளம் மக்களவை தொகுதியில் 2009 வரை வென்றவர்கள்
Credit: Wikipedia
தேனிமக்களவை தொகுதியில் வென்றவர்கள்
Credit: Wikipedia
வாக்காளர்கள் விவரம் (2024)
ஆண் - 7,92,195
பெண் - 8,20,091
மூன்றாம் பாலினத்தவர் - 217
மொத்த வாக்காளர்கள் - 16,12,503
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
ஆண்டிப்பட்டி - மகாராஜன் (திமுக)
பெரியகுளம் (தனி) - சரவண குமார் (திமுக)
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம் (அதிமுக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
சோழவந்தான் (தனி) - வெங்கடேசன் (திமுக)
உசிலம்பட்டி - ஐயப்பன் (அதிமுக)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“