Advertisment

Lok Sabha Election 2024 TN BJP Alliance Results Live: தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க-வுக்கு ஏமாற்றம்!

Lok Sabha Election 2024 TN BJP Alliance Results Live updates: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் குறித்து இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
TN BJP Alliance

Lok Sabha Election 2024 TN BJP Alliance Results

Lok Sabha Election 2024 TN BJP Alliance Results Live updates: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி (இந்தியா கூட்டணி), அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியாக அமைந்தது.

Advertisment

தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியில், திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டுள்ளது. புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐ.ஜே.கே ) நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.

பா.ஜ.க கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். பா.ஜ.க கூட்டனியில் உள்ள பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள த.மா.கா ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.  அதே போல, அ.ம.மு.க. திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு 1-3 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியில் கோவை (அண்ணாமலை), தருமபுரி (சௌமியா அன்புமணி), திருநெல்வேலி (நயினார் நாகேந்திரன்), தென் சென்னை (தமிழிசை), நீலகிரி (எல். முருகன்) ஆகிய தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக கவனிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் என தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். அவர்களின் பிரச்சாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனபதை இன்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் பார்க்கலாம். பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்து இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jun 04, 2024 22:53 IST
    சிதம்பரம் தொகுதியில் பாஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி தோல்வி

    சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்தைப் பிடித்தார்.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


    அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்தார்.

    பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி 1,68,493 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நா.த.க வேட்பாளர் 65,589 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.



  • Jun 04, 2024 22:48 IST
    வேலூர் தொகுதியில் பாஜ.க கூட்டணி ஏ.சி. சண்முகம் தோல்வி

    வேலூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பா.ஜ.க-வின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு 3,52,990 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

    வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், 5,68,692 வாக்குகள் பெற்று 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் 3,52,990 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2-வது இடத்தைப் பிடித்தார்.

    அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 1,17,682 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3-வது இடம் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நா.த.க வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 53,284 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.



  • Jun 04, 2024 21:51 IST
    தென்காசியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் தோல்வி; தி.மு.க-வின் ராணி ஸ்ரீகுமார் வெற்றி!

    தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் 2,08,825 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்தைப் பிடித்தார்.


    தென்காசி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 4,25,679 வாக்குகள் பெற்று 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகள் பெற்று தோல்வியடைந்து 2வது இடத்தைப் பிடித்தார்.


    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 1,30,335 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்தார்.  



  • Jun 04, 2024 21:46 IST
    திருவள்ளூர் தொகுதியில் பா.ஜ.க-வின் பாலகணபதி தோல்வி; காங். வேட்பாளர் சசிகாத் செந்தில் வெற்றி!

     

    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று 572155 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் 2வது இடத்தைப் பிடித்தார்.


    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகள் பெற்று தோல்வியடைந்து 3வது இடத்தைப் பிடித்தார்.


    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்தார்.  



  • Jun 04, 2024 21:39 IST
    விழுப்புரம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் முரசொலி சங்கர் தோல்வி; வி.சி.க ரவிக்குமார் வெற்றி!

    விழுப்புரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க சார்பில் போட்டியிட்ட சிட்டிங் எம்.பி. ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

    எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜே. பாக்யராஜ் 4,06,330 வாக்குகள் பெற்று தோல்வியடைந்து 2வது இடத்தைப் பிடித்தார்.

    பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் 1,81,882 வாக்குகள் பெற்று தோல்வியடைந்து 3வது இடத்தைப் பிடித்தார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 57,242 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்தார்.  



  • Jun 04, 2024 20:27 IST
    கடலூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் தோல்வி

    கடலூர் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி கட்சியான பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் 2,05,244 வாக்குகள் பெற்று 2,49,809 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.


    கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4,55,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர் சிவக்கொழுந்து 2,69,157 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சான் 2,05,244 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம் 57,424 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 20:19 IST
    கிருஷ்ணகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் தோல்வி

    கிருஷ்ணகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் 1,86,977 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,42,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 2,69,743 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, பா.ஜ.க வேட்பாளர் நரசிம்மன் 1,86,977 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா ராணி 95,239 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது.



  • Jun 04, 2024 19:53 IST
    கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி; காங்கிரஸின் விஜய் வசந்த் வெற்றி!

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 5,40,568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 3,60,633 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியா ஜெனிஃபர் கிளாரா 51,893 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

    அ.தி.மு.க வேட்பாளர் பசில்லன் நசரேத் 40,180 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.



  • Jun 04, 2024 19:41 IST
    திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் தோல்வி; காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி

    திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 4,99,202 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3,33,303 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    அ.தி.மு.க வேட்பாளர் ஜான்சி ராணி 89,031 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 86,719 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:37 IST
    நீலகிரி தொகுதியில் எல். முருகன் தோல்வி; தி.மு.க-வின் ஆ. ராசா வெற்றி

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் தோல்வி அடைந்துள்ளார். நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் 2,32,627 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    அ.தி.மு.க வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 2,20,230 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 58,821 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:33 IST
    கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வி; தி.மு.க-வின் கணபதி ராஜ்குமார் வெற்றி!

    கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார். கோவை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,22,223 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை 4,33,902 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் 2,27,093 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 58,821 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:27 IST
    மத்திய சென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தோல்வி

    மத்திய சென்னை  மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிகையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்று 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    தே.மு.தி.க வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 46,031 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 19:21 IST
    தென் சென்னை தொகுதியில் தமிழிசை தோல்வி; தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி

    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரை தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிகையின் முடிவில், தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,06,703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 2,89,358 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தார்.

    அ.தி.மு.க ஜெயவர்தன் 1,68,426 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.

    இதற்கு அடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 76,703 வாக்குகள் பெற்றுள்ளார்.



  • Jun 04, 2024 18:33 IST
    மதுரை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ராம சீனிவாசன் தோல்வி

    மதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் தொடந்து முன்னிலை வகித்துவந்த நிலையில், 4,29,581 வாக்குகள் பெற்று, 2,08,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ராம. சீனிவாசன் 2,20,786 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.



  • Jun 04, 2024 17:45 IST
    தருமபுரியிலும் பா.ஜ.க கூட்டணிக்கு அதிர்ச்சி; பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி

    தருமபுரியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வியை தழுவியுள்ளார். தி.மு.க வேட்பாளர் மணி 18524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்



  • Jun 04, 2024 16:10 IST
    பா.ஜ.க கூட்டணிக்கு அதிர்ச்சி; சௌமியா அன்புமணி பின்னடைவு

    தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த செளமியா அன்புமணி பின்னடைவைச் சந்தித்துள்ளார். தி.மு.க வேட்பாளர் ஆ.மணி 2.82 லட்சம் வாக்குகள் பெற்று, 6,925 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்



  • Jun 04, 2024 15:55 IST
    திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடைவு

    மதியம் 3 மணி நிலவரப்படி, 19வது சுற்று வாக்கு எண்ணிக்கையில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்  3,98,714 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    பா.ஜ.க வேட்பாளர் நயினர் நாகேந்திரன் 2,55,854 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

    அ.தி.மு.க வேட்பாளர் ஜான்சி ராணி 68,442 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.



  • Jun 04, 2024 15:52 IST
    கோவையில் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவு

    மதியம் 3 மணி நிலவரப்படி, 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில், கோவையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 2,79,235 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை 2,15,523 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

    அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன்  1,08,139 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.



  • Jun 04, 2024 15:23 IST
    விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு சென்ற ராதிகா சரத்குமார்

    விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இழுபறி நிலவிவரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார் 89,655 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.



  • Jun 04, 2024 15:16 IST
    மத்திய சென்னையில் 2-வது இடத்தில் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம்

    மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் 2,47,759 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    அ.தி.மு.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 91,307 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.



  • Jun 04, 2024 15:14 IST
    பின்னடைவைச் சந்தித்த பா.ஜ.க கூட்டணி தலைவர்கள்

    ஓ.பன்னீர்செல்வம் – ராமநாதபுரம்

    டி.டி.வி தினகரன் – தேனி

    ஏ.சி சண்முகம் – வேலூர்

    பாரிவேந்தர் – பெரம்பலூர்

    ஜான் பாண்டியன் – தென்காசி

    தேவநாதன் யாதவ் - சிவகங்கை



  • Jun 04, 2024 15:08 IST
    வட சென்னை தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ்

    வட சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி 2,47,759 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    அ.தி.மு.க வேட்பாளர் ஆர். மனோகர் 81,550 வாக்குகள் பெற்றுள்ளது.

    பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் 65,074 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.



  • Jun 04, 2024 15:05 IST
    தென் சென்னை தொகுதியில் தமிழிசை தொடர்ந்து பின்னடைவு

    தென் சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 1,67,906 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 1,02,968 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் 54,590 வாக்குகள் பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 14:01 IST
    கோவையில் அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

    2 மணி நிலவரப்படி: கோவை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,83,682 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 1,32,836 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் பின்னடைவை சந்தித்துளார். அண்ணாமலை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். 



  • Jun 04, 2024 13:55 IST
    நீலகிரியில் எல். முருகன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

    நீலகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் ஏறக்குறைய 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.



  • Jun 04, 2024 13:49 IST
    கோவையில் அண்ணாமலை 20,165 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு

    மதியம் 1.30 நிலவரப்படி: கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கிட்டத்த 20,165 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். தி.மு.க வேட்பாளார் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.



  • Jun 04, 2024 13:06 IST
    தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி 14,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

    மதியம் 1 மணி நிலவரப்படி: தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் 1,74,910 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 1,60,308 வாக்குகள் பெற்றுள்ளார்.

    சௌமியா அன்புமணி 14,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 12:13 IST
    தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை

    நண்பகல் 12 மணி நிலவரப்படி: பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 1,26,025 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
    தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 1,06,457வாக்குகள் பெற்றுள்ளார்.
    சௌமியா அன்புமணி 19,568 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



  • Jun 04, 2024 12:06 IST
    தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை

    தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    நண்பகல் 11 மணி நிலவரப்படி: பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 81,922 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
    தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 71,182 வாக்குகள் பெற்றுள்ளார்.
    அ.தி.மு.க 59,157 வாக்குகள் பெற்றுள்ளது.
    நா.த.க 13,824 வாக்குகள் பெற்றுள்ளது.



  • Jun 04, 2024 10:40 IST
    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ் பின்னடைவு

    காலை 10.30 மணி நிலவரப்படி:

    ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 7,572 வாக்குகள் பெற்று முன்னிலை

    பா.ஜ.க கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் 3,994 வாக்குகள் பெற்றுள்ளார். 

    அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் 1,549 வாக்குகள் பெற்றுள்ளர்.



  • Jun 04, 2024 10:10 IST
    திருவள்ளூர் தொகுதியில் பா.ஜ.க பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்

    திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 28,730 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

    தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பி 9,938 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    பா.ஜ.க வேட்பாளர் பாலகணபதி 4,210 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.



  • Jun 04, 2024 09:59 IST
    நீலகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் பின்னடைவு

    நீலகிரி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ. ராசா - 15,266 வாக்குகள் பெற்று முன்னிலை

    பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் 8,618 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 7,368 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் 1017 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.



  • Jun 04, 2024 06:29 IST
    தமிழ்நாட்டில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றும் அதிமுகவைவிட பாஜக அதிக இடங்களை வெல்லும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த முடிவுகள் உண்மையாக மாறினால், பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



  • Jun 04, 2024 06:22 IST
    பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

    ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.



Bjp Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment