Lok Sabha Election | நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்றைய தினத்தில் உத்தரப் பிரதேசத்தின் சில இடஙகளிலும் முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.
வாக்குப் பதிவை பொறுத்தவரை ஏப்.19ஆம் தேதி முதல்கட்டமாக தொடங்கும் நிலையில், நிறைவு கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும்.
இந்த நிலையில், “முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று (ஏப்.17,2024) மாலை 6 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விசிக, இடதுசாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் உள்ளன.
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிளும், பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“