/indian-express-tamil/media/media_files/mrFaQgTAnwhsyisjr5Nx.jpg)
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் ஒரு பணிகளாக அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.
அதன்படி கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகைப்பட விளக்கக் காட்சியில் (Photo Gallery) வைக்கப்பட்டிருந்த முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதுமட்டுமின்றி கோவையில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீதும் வெள்ளை பெயிண்ட்கள் அடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஜி.பி.எஸ் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.