New Update
00:00
/ 00:00
புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப எடுத்து செல்லும் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பிடித்து அரசு கரூவூலகத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தலையொட்டி புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளில் காவல் துறையினர் உதவியுடன் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஜிப்மர் எல்லைப் பகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும், காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வந்த சி.எம். எஸ் என்ற தனியார் நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கோடிக் கணக்கில் 500 ரூபாய் புதிய நோட்டுகளும், பழைய நோட்டுகளும் இருந்தன.
இவற்றிற்கு உரிய ஆவணங்களை வாகனத்தில் இருந்தவர்கள் காண்பிக்கவில்லை.
இதனால் வாகனத்தை நேரடியாக புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலகத்திற்கு கொண்டு வந்து பணத்தை எண்ணினார்கள்.
அவர்கள் வைத்திருந்த பண ரெசிப்ட்டில் ஜனவரி 21ம் தேதி பணம் எடுத்ததற்கான ஆதாரம் இருந்தது. ஆனால் இன்று வரை இந்த பணத்தை ஏடிஎமில் நிரப்பாமல் வாகனத்தில் வைத்து சுற்றுவது ஏன் என்று கேட்டதற்கு மழுப்பலாக பதில் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இரண்டு நபர்களையும் புதுச்சேரியில் உள்ள கணக்கு மற்றும் கருவுலாக அலுவலகத்திற்கு கொண்டு வந்து பணத்தை எண்ணி பார்த்தனர்.
அதில் 3 கோடியே 47 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது.
மேலும் 98 லட்ச ரூபாயை ஏடிஎம் இயந்திரங்களை நிரப்பியதாகவும், ஒரு கோடி ரூபாய் வங்கி அலுவலகத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்தமாக ஐந்து கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்ய இருந்த நிலையில் ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கு கருவூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் உரிய சம்மன் அனுப்பி வங்கி அதிகாரிகள் மற்றும் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்துடன் விசாரணை நடத்தி ஆவணங்கள் இருந்தால் முறையான விசாரணைக்கு பிறகு ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தய்யா தெரிவித்தார்.
இந்த சோதனையில் காவல் அதிகாரிகள் அகிலன், மோகன், போலீஸ் வினோத்குமார், பறக்கும்படை அதிகாரி கணேசன், ஓட்டுனர் மணிமாறன்,பல்நோக்கு பணியாளர் ஈஸ்வர தாஸ் ஆகியோர் ஈடுபட்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.