மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க மற்றும் ஓ.பி.எஸ் தரப்புக்கான தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கீடு, வேட்பாளர் பட்டியல் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு போட்டியிடும் தொகுதிகளை பா.ஜ.க அறிவித்துள்ளது. பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க போட்டியிடும் தொகுதிகள்
1). காஞ்சிபுரம்
2). அரக்கோணம்
3). தர்மபுரி
4). ஆரணி
5). விழுப்புரம்
6). கள்ளக்குறிச்சி
7). சேலம்
8). திண்டுக்கல்
9). மயிலாடுதுறை
10). கடலூர்
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு (ஓ.பி.எஸ் தரப்பு)
இராமநாதபுரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“