/indian-express-tamil/media/media_files/kr5iVUfVFFWZOyxt3CF0.jpeg)
BJP Leader K Annamalai files nomination from Coimbatore parliamentary constituency
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் இன்று தாக்கல் செய்தார்.
முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்டோருடன் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை, பின்னர் கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்றார்.
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அண்ணாமலை#Coimbatore | #Annamalai | #LokSabhaElection2024pic.twitter.com/RPZiI33zgA
— Indian Express Tamil (@IeTamil) March 27, 2024
அண்ணாமலை வேட்பு மனு தாக்கல்: பா.ஜ.க தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஊர்வலமாக வந்தார். தடுப்புகளை அகற்றி புகுந்ததனால் போலிசார் பா.ஜ.க-வினரிடையே தள்ளுமுள்ளு: வாத்திய ஜமாப் கருவியை போலிசார் மீது பா.ஜ.கவினர் வீசினர். pic.twitter.com/bNsTfvVJJ0
— Indian Express Tamil (@IeTamil) March 27, 2024
வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து அங்கிருந்து வேட்பாளர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் காரில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.