தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது.
திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலுடன், திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
அதன்படி,
வட சென்னை- கலாநிதி வீராசாமி
தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன்
மத்திய சென்னை- தயாநிதி
ஸ்ரீபெரும்புதுார் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் (தனி) - க.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
வேலுார்- கதிர்ஆனந்த்
தர்மபுரி - ஆ.மணி
திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
ஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - கே.மலையரசன்
சேலம் - செல்வகணபதி
ஈரோடு – பிரகாஷ்
நீலகிரி (தனி) - ஆ.ராசா
கோவை - கணபதி ப. ராஜ்குமார்
பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
பெரம்பலுார் - அருண் நேரு
தஞ்சாவூர் - ச.முரசொலி
தேனி - தங்க தமிழ்செல்வன்
துாத்துக்குடி - கனிமொழி
தென்காசி - ராணி ஸ்ரீகுமார்
இப்பட்டியலில் 11 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள், 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியிலும், வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.