தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வியாழக் கிழமை (மார்ச் 21) வெளியானது. 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது அதன்படி, கோவை பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ’கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது.
70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்துக்கும், மறுபுறம் தர்மத்துக்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க வேண்டும்.
மோடி பிரதமராகும்போது, சர்வதேச வரைபடத்தில் கோவையை பதிக்க போகிறோம். தமிழகத்தில் பா.ஜ., போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்று, ஜூன் 4ல் சரித்திரம் படைக்கும்.
இப்போதும் சொல்கிறேன், டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை; தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன். மோடி போட்டியிட உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவை மதிக்கிறேன்.
Indebted to the people of Coimbatore and brothers & sisters of @BJP4TamilNadu for their love & affection.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 22, 2024
Here to serve! pic.twitter.com/GYehp8trPb
மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2026-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்காகதான். 400 எம்.பி.,க்களை பெற்று ஆட்சி அமைத்தாலும், 2026 தான் எங்களது குறி.
திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026-ம் ஆண்டு பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாரபுரத்தோடு என் சண்டை. கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள்.
நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கிறோம். மக்களை நம்பி கோவையில் களமிறங்குகிறேன். பா.ஜ.க ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.