மக்களவை தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிட்டிங் எம்.பி.,க்கள் 6 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பல்வேறு கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் தி.மு.க கூட்டணியில், தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேநேரம் சிட்டிங் எம்.பி.,க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சீட் மறுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பட்டியல்
செந்தில் குமார் - தர்மபுரி
எஸ்.ஆர்.பார்த்திபன் - சேலம்
சண்முகசுந்தரம் - பொள்ளாச்சி
கவுதம சிகாமணி - கள்ளக்குறிச்சி
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - தஞ்சாவூர்
தனுஷ் எம். குமார் - தென்காசி
இதுதவிர கூட்டணி கட்சிகளிடம் தொகுதி மாற்றப்பட்ட வகையில், மேலும், 4 சிட்டிங் எம்.பி.,களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடலூர் – டி.ஆர்.வி.எஸ். ரமேஷ், திருநெல்வேலி – ஞானதிரவியம், மயிலாடுதுறை – ராமலிங்கம், திண்டுக்கல் - வேலுச்சாமி ஆகியோருக்கு இந்தத் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“