தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
Advertisment
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக்கூடிய பணம், மதுபானம், நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் நிலையான கண்காணிப்பு குழுக்கள் (SST) மற்றும் பறக்கும் படைகளுடன், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய காரை பறக்கும் படையினர் திடீரென வழிமறித்து தீவிர சோதனை செய்தனர்.
Credit: News Nine Youtube Channel
சோதனை நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி காரில் இருந்து இறங்கவில்லை. சோதனை முடியும் வரை அவர் காரிலேயேஅமர்ந்திருந்தார்.
காரில் எந்தவிதமான பணம் மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே காரை செல்ல பறக்கும் படை அதிகாரிகள் அனுமதித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“